"நர்ஸ் மேடம்.. குழந்தை தலை வெளியே தெரியுது.. மூச்சு திணறுது... பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்
பிரசவத்துக்கு வந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
திருப்பத்தூர்: "நர்ஸ் மேடம்.. குழந்தை தலை வெளியே தெரியுது.. மூச்சு திணறுது.. ரத்தம் அதிகமாக வருது.. சீக்கிரமா வாங்க" என்று கூப்பிட்டும் அரசு மருத்துவமனையில் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.. இதையடுத்து கர்ப்பிணி பெண்ணின் உயிர் பரிதாபமாக பிரிந்துவிட்டது.
திருப்பத்தூர் டவுன் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்... கஜன்நாயக்கன்பட்டியில் செருப்பு கடை ஒன்றை வைத்திருக்கிறார்.. மனைவி பெயர் பரீதா.. 23 வயதாகிறது.. 3 வயதில் முகமது என்ற குழந்தை இருக்கிறான்.
இப்போது திரும்பவும் பரீதா கர்ப்பமானார்.. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று விடிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.. அதனால்.. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை சேர்த்தனர். ஆனால் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு கொண்டே இருந்தது.

நர்ஸ்கள்
உடன் வந்த சொந்தக்காரர்கள் இதை பார்த்து பயந்துவிட்டனர்.. அதனால், ஓடிப்போய் டியூட்டியில் இருந்த நர்சுகளுக்கு தகவல தந்தனர்.. "வர்றோம்.. போங்க.. டாக்டர்கள் யாரும் இல்லை" என்று நர்ஸ்கள் பதிலளித்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிரசவ வலி
ஆனால் வலி அதிகமாக ஏற்பட்டு.. குழந்தையின் தலைவெளியே வந்துள்ளது.. "நர்ஸ் மேடம்.. தலை வெளியே தெரியுது.. சீக்கிரமா வாங்க" என்று கூப்பிட்டுள்ளனர்.. அப்போது காலை 6 மணிக்கு பணியில் இருந்த டாக்டர், 2 நர்ஸ்கள் பரீதாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

மூச்சு திணறல்
காலை 7 மணிக்கு பரீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.. நர்ஸ்கள் உடனே வெளியே வந்துவிட்டிருக்கிறார்கள்.. அந்த சமயத்தில், பரீதாவுக்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. திரும்பவும் உறவினர்கள் ஓடிப்போய் பரீதாவுக்கு மூச்சு திணறுகிறது என்று சொல்லி உள்ளனர்.. டிபன் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.. சாப்பிட்டுவிட்டு வர்றோம் என்று அலட்சியமாக பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது.

கொந்தளிப்பு
ஆனால், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே பரீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்துதும் உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்.. "ஒழுங்கான மருத்துவம் செய்யவில்லை.. அலட்சியமாக இருந்ததால்தான் பரீதா உயிர் போனது என்று குற்றஞ்சாட்டி மகப்பேறு அவசர சிகிச்சை மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.. இதனால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பானது... போலீசார் வந்து சமாதானம் செய்தபிறகுதான் மறியல் கைவிடப்பட்டது.


Click it and Unblock the Notifications
