கரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
கரூர்: கரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகிலுள்ள சிந்தலவாடியைச் சேர்ந்தவர் அருண் குமார் (25) எம்.காம்., பட்டதாரியான இவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். ஞாயிறு இரவு, அங்குள்ள மாரியம்மன் கோவில் பூச்சொரித்தல் விழா நடந்துள்ளது. இதை பார்க்க சிறுமியின் வீட்டில் இருந்த எலோரும் கோவிலுக்கு போய்விட்டனர்.
இந்த நேரத்தில், அந்த சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்த அருண்குமார், சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் சாக்லேட் கொடுத்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய தன் பெற்றோர்களிடம் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் படி, குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications