நிம்மதியா குளிக்க கூட முடியலையே.. பாத்ரூமுக்குள் கேமரா கண்களுடன் ஊடுருவிய இளைஞர்!
பெண்கள் குளித்ததை ஆபாசமாக படம் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டா.
Recommended Video

சென்னை: செல்போன் வந்தாலும் வந்தது, சில இளைஞர்களின் செல்போனில் ஆபாசங்கள் பல்வேறு ரூபங்களில் நிறைந்து வழிகிறது. சென்னையில் ஒரு இளைஞர் பெண்களை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்திருப்பதை கண்டு போலீசாரே மிரண்டனர்.
திருவொற்றியூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்று உள்ளது. இதில் சுமார் 10 குடும்பங்கள் வாடகைக்கு உள்ளன. இவர்களுக்கெல்லாம் மொத்தமாக சேர்த்து ஒரே ஒரு கழிப்பறை, குளியலறை. குளியலறை மேல் பகுதியில் வென்டிலேட்டருக்காக ஒரு ஜன்னல் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் கண்ணாடி ஜன்னல்.

இந்த 10 வீடுகளில் ஒரு வீட்டில் குடியிருப்பவர் பெயர் ராஜன். 21 வயதான இவர் கார்பென்ட்டராக உள்ளார். சம்பவத்தன்று அதே குடியிருப்பை சேர்ந்த ஒரு இளம்பெண் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். இதனை ராஜன், கண்ணாடி ஜன்னல் வழியாக செல்போனில் படம் பிடித்தார். இதனை கண்ட அந்த பெண் அதிர்ச்சியுற்று அலறினார். இந்த சத்தத்தை கேட்டு குடியிருப்புவாசிகள் ஓடிவந்தனர். தப்ப முயன்ற ராஜனை விரட்டி பிடித்து செல்போனை பிடுங்கினர்.
அப்போதுதான் தெரியவந்தது, அந்த குடியிருப்பில் உள்ள எல்லா பெண்களும் துணி மாற்றுவது, குளிப்பது போன்ற காட்சிகளை ஒன்றுவிடாமல் வீடியோ எடுத்து வந்துள்ளார் என்று. இதை தவிர வேறு பல ஆபாச படங்கள், காட்சிகளும் இருந்தன. இதனால் அதிர்ச்சியுற்ற, மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களின் கணவர்கள் என எல்லோரும் சேர்ந்து அந்த இளைஞனை அடித்து துவைத்தனர். பின்னர் திருவொற்றியூர் போலீசாரிடம் இளைஞனையும், செல்போனையும் ஒப்படைத்தனர். இப்போது போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடகை பணம் வேண்டும் என்பதற்காக வீடுகளை கட்டி விட்டால் மட்டும் போதுமா? குடியிருப்புவாசிகளுக்கு உரிய சவுகரியத்தை வீட்டின் உரிமையாளர்கள் செய்து தர வேண்டாமா? குறைந்தபட்சம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையிலா வீடுகளை வைத்திருப்பது? 10 குடும்பத்துக்கு சேர்த்து ஒரு கழிவறை, ஒரு குளியலறை என்றாலும் அதனை முறையாக தர வேண்டியது அவசியம் அல்லவா? அதேபோல வாடகைக்கு குடியிருப்பவர்களும் தங்கள் வீட்டு பெண்களுக்கான இடங்களை தேர்ந்தெடுத்து குடியேற வேண்டாமா? இளம் பெண்களே... உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து இனி எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications