சென்னையில் பயங்கரம்... காதலிக்கு கத்திக்குத்து, காதலன் தற்கொலை முயற்சி!

சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் காதலியை குத்திவிட்டு காதலனும் தற்கொலை முயற்சி- வீடியோ

    சென்னை : சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் காதலர்கள் இடையே நடந்த தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது. காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன் இருவரும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் காதல் ஜோடிகளின் நடமாட்டம் இருக்கும். இன்று மாலை பூங்கா திறந்த சமயத்தில் ராஜேஷ், நிவேதா இருவரும் பூங்காவிற்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

    Youth assaulted his lover at Chennai Annanagar tower park

    அப்போது இருவருக்கும் இடையேயான வாய்ப்பேச்சு முற்றி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காதலன் ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிவேதாவை தாக்கியுள்ளான்.

    தொடர்ந்து நிவேதாவை கத்தியால் சரமாரியாக ராஜேஷ் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். நிவேதாவை கத்தியால் குத்தியதோடு நின்று விடாமல் ராஜேஷ் தானும் அதே கத்தியால் தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதற்குள் பூங்காவில் அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+