திருப்பத்தூரில் காரை வாட்டர் வாஷ் செய்த போது வந்த எமன்! துடித்து போன இளைஞர்! நடந்தது என்ன?
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கார் சுத்தம் செய்யும் ஆட்டோ கேரேஜ் மையத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூரில் கார்களை சுத்தம் செய்யும் கேரேஜ் உள்ளது. இங்கு கார் சர்வீஸ், வாட்டர் வாஷ், கார் பழுது நீக்கம், புதிய உதிரிபாகங்களை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு நேற்றைய தினம் கார் ஒன்று சர்வீஸுக்கு வந்தது. அப்போது அதை வாட்டர் வாஷ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் சில லிக்விட்டை போட்டு ஊழியர் சுதாகர் (24) நுரைக்க வைத்தார்.
உடனே அந்த நுரையை சுத்தப்படுத்த பிரஷர் வாஷரை எடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தார். அப்போது திடீரென கட்டை போல் சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த ஒருவர் பதறி அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி கடைசியில் கடையில் இருந்த மற்றவர்களை அழைக்கிறார்கள்.
பிறகுதான் தண்ணீர் வழியாக அந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாட்டர் வாஷ் வயரை எடுத்துவிட்டு சுதாகரை தூக்கினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது போன்று ஒரு விஷயத்தை சுதாகர் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். அலுவலகத்திற்கு வந்த நாம் திரும்பவும் உயிருடன் வீட்டிற்கு போக மாட்டோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டாரே! அவரது இறப்பை எண்ணி உடன் இருந்தவர்கள் கண் கலங்கினர். வாட்டர் வாஷ் செய்த போது ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது, திடீரென ஷாக் அடித்து கட்டை போல் சரிந்துவிட்டார். எதிலிருந்து ஷாக் அடித்தது என தெரியவில்லை. இது போல் திடீர் மரணங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது வேதனையை தருகிறது.
அது போல் திருப்பத்தூரில் பூரிகமானிமிட்டா பகுதியை சேர்ந்த கோவிந்தனின் மகன் மாரி (45). இவர் கதிரிமங்கலம் பகுதியில் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக 7 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென அந்த பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அப்போது மாரி, டிரான்ஸ்பார்மரில் ஏறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு பலியாகிவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications