தெய்வமே, தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே.. காரைக்காலில் முதல் நாளே குடிமகன்கள் செய்த அட்டகாசம்
காரைக்கால்: தமிழகத்தின் எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அப்போது சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கைத்தட்டி இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Recommended Video
புதுச்சேரியில் கடந்த 45 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக இன்று முதல் அனைத்து கடைகளையும் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காரைக்கால் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டது. நீண்ட நாளைக்கு பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுபான பிரியர்கள் காலை முதலே கடைகள் முன்பு ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் காரைக்காலில் உள்ள ஒரு மதுபானக்கடை காலை 9 மணிக்கு திறக்கப்பட்ட போது அங்கு கூடியிருந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

மதுகுடிப்போர்
கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குடித்து வந்த எங்களுக்கு, மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மதுக்குடிப்போர் தெரிவித்துள்ளனர்,.

கடலூர் எல்லை
இதனிடையே கடலூர், புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக்கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு தமிழக பகுதி குடிமகன்கள் காரணமாகும். ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று மதுவாங்கி செல்கின்றனர். சாராயக்கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

பெரும் சாதனை
இதெல்லாம் டிரெய்லர் தான். மெயின் பிக்சர் எல்லாம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கும் போது இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத மதுவிற்பனை கடந்த மே 8 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தது. இரண்டு நாட்களில் மட்டும் 800 கோடிக்கு மேல் விற்பனையானது.

கசப்பான உண்மை
எனவே ஒரு வேளை அடுத்த வாரம் திங்கள் முதல் கடை திறக்கப்பட்டால், கடந்த மாதம் இரண்டு நாளில் விற்ற சாதனையை தமிழகம் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மது அருந்துவோர் எண்ணிக்கை தமிழத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பது கசப்பான உண்மை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications