துக்க வீட்டில் ஐபிஎல் கொண்டாட்டமா? ரத்து செய்திடுக... பாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு உதயம்!
போராட்டத்தை திசை திருப்பவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுவதாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை தொடங்கிய பாரதிராஜா இவ்வாறு கூறினார்.
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா?என்றும் அவர் கேட்டுள்ளார்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை இயக்குநர் பாரதிராஜா தொடங்கினார். இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, பேரவையில் இருப்பவர்கள் அரசியல் சாராமல் இருக்க வேண்டும் என்று கூறினார். தமிழனாக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் நிலத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் சாயம் எதுவுமின்றி போராடவும், கலை இலக்கிய பண்பாட்டினை காக்கவே இது தொடங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை காலியாக்கினால் உலகத்தின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பும் என்று ஆர் கே செல்வமணி கூறினார்.
எங்களுடைய போராட்டம் வேறுமாதிரியான இருக்கும். என்னமாதிரியான போராட்டம் என்பதை இப்போது சொல்ல மாட்டோம் என்று செல்வமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications