மீண்டும் மிரட்டும் ஜிக்கா வைரஸ்.. தமிழகத்திலும் ஒருவருக்கு பாதிப்பு- சுகாதாரத் துறை தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜிக்கா வைரஸ் பீதி எழுந்துள்ளது.

கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் பிராந்திய நாடுகளான, அமெரிக்க, பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது.

Zika virus in tamilnadu, says vijayabhaskar

2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.

மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 நாடுகளில் ஜிகா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெட்றாபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறிவருகிறார்.

பாதிக்கப்பட்டவரின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Zika virus found in tamilnadu, says TN health minister vijayabhaskar
Please Wait while comments are loading...