விவசாயிகளுக்கு ஹேப்பி.. கும்பகோணத்தில் நல்ல செய்தி சொன்ன திமுக அமைச்சர்.. என்னாது மானியத்துடன் கடனா?
தஞ்சாவூர்: பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பானது, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
3 மாதங்களுக்கு முன்பு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆவின் நிறுவனம் மேம்பாட்டுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது பற்றி பகிர்ந்திருந்தார்.

அப்போது, "பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தொழில் செய்ய உகந்த சூழல் ஏற்படுத்தப்படும். தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனை மேற்கொள்ளும்போது, பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.. இதற்காக, 2 லட்சம் கறவை மாடுகள் வழங்கப்படும்.
எதிர்பார்ப்புகள்: பால் உற்பத்தியை பெருக்கவும், ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.. எனவே, பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்புகளானது, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் நம்பிக்கை தகவலை தெரிவித்துள்ளார்
பால்வளத்துறை கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பால் உற்பத்தியை பெருக்குவதற்காக மானிய கடன், வங்கிக் கடன் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கான வட்டி விகிதம் 15 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கால்நடை வாங்குவதற்காகவும் அதை பராமரிப்பதற்காகவும் ஏறத்தாழ ரூ.200 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடனுதவி: மேலும், கடன் உதவி கோரி 1.10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதை பரிசீலனை செய்து விரைவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படவில்லை. மற்றொரு தயாரிப்பை அறிமுகம் செய்து அது பசும்பால் தரத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
படித்து வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் யாராக இருந்தாலும் புதிதாக ஆவின் விற்பனை மையங்களை தொடங்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். இவர்களுக்கு கடன் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். மழையால் பால் விற்பனை பாதிக்காது என்பதால் 100 சதவீத தட்டுப்பாடு இல்லாமல் பால் விற்கப்படும். சென்னையில் 70 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி கொள்முதல் விற்பனையை பெருக்கும் முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்
குட்நியூஸ்: நடப்பாண்டில் 2 லட்சம் பேருக்கு கறவை மாடுகளை வாங்க மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம்" என்றார் அமைச்சர்.. பால் உற்பத்தியை மேம்படுத்த 2 லட்சம் கறவை மாடுகள் வாங்கும் திட்டம் துவங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தது, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications