ஆடு மேய்க்க போன காட்டுக்கு போன பெண்.. சிதறி கிடந்த ஆடைகள்.. சிக்கிய "தூண்டில் மீன்".. 2 பேரும் கைது
ஆடு மேய்க்க போன பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 பேர் கைது
தஞ்சை: ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்களை 12 மணி நேரத்தில் அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒரத்தநாடு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள வடவாறு பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 30 வயதாகிறது.. இன்னும் திருமணம் ஆகவில்லை.
அருகில் உள்ள காட்டு பகுதியில் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு செல்வது இவரது வழக்கம்.. சம்பவத்தன்றும் அப்படித்தான் மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்து சென்றுள்ளார்.. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை

இளம்பெண்
இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பதறிபோன பெற்றோர், அவரை தேடி காட்டுப்பகுதிக்கு சென்றனர்.. அப்போதுதான், பெண்ணின் செருப்பு அறுந்து கீழே கிடந்ததை பார்த்தனர்.. அதன் அருகிலேயே அரிவாள் ஒன்றும் இருந்துள்ளது.. அங்கிருந்து சற்று தூரத்தில், இளம்பெண் சடலமாக விழுந்து கிடப்பதை கண்டு அலறினர்.. உடம்பெல்லாம் பெண்ணுக்கு காயங்கள் இருந்தன.. இதையடுத்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டு, உடனடியாக அவர்கள் வந்து சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

மீன்பிடி தூண்டில்
தனிப்படை போலீசார் விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அங்கிருந்த ஒரு மீன்பிடி தூண்டில் கண்ணில் பட்டது.. இதுதான் முதல் க்ளூவாக போலீசாருக்கு கிடைத்தது.. இந்த தூண்டில் யாருடையது என்ற விசாரணை மேற்கொண்டபோது, 2 பேர் சிக்கினர்.. ஒருவர் பெரியசாமி, இன்னொருவர் சதீஷ்.. இவர்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.. சம்பவத்தன்று ஆற்றில் இவர்கள் 2 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்..

பலாத்காரம்
அப்போதுதான் ஆடு மேய்க்கும் பெண்ணை ஆற்றங்கரையோரம் பார்த்துள்ளனர்.. அவருடன் யாரும் இல்லாததை கண்டு, 2 பேருமே புதர் பகுதிக்கு அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதே பகுதியில், ஆடுகளை மேய்க்க பலமுறை வரும்போதெல்லாம் அந்த பெண்ணை 2 பேரும் பார்த்துள்ளனர்.. தொடர்ந்து நோட்டமிட்டு வந்த நிலையில்தான், சம்பவத்தன்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது...

2 பேர் கைது
ஊருக்குள் சென்று விஷயத்தை சொல்லிவிட்டால் என்னாவது என்று 2 பேருமே பயந்துபோய், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததுமே, பெண்ணின் தலையை தரையிலேயே அடித்து அடித்து கொன்றுள்ளனர்.. இந்த வாக்குமூலத்தையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. இதில் இன்னொருவருக்கு கூட்டு உள்ளதாம்.. அவர் தலைமறைவாக இருப்பதால், தேடும் பணி தொடர்கிறது.. சம்பவம் நடந்து வெறும் 12 மணி நேரத்துக்குள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications