7 ஏக்கர் நிலம், தென்னை மரம்.. சொத்து ஆவணங்கள், பாகப்பிரிவினை சிக்கல்? தஞ்சை கலெக்டரிடம் ஓடிய தம்பதி
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் வயதான தம்பதியினர் புகார் ஒன்றை கண்ணீர் மல்க தந்திருக்கிறார்கள்.. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது?
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த ராசு என்ற 74 வயது முதியவர் தன்னுடைய மனைவியுடன் வந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார்..
அந்த மனுவில் உள்ளதாவது: "எங்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனது மகன்கள் என்னையும், என் மனைவியையும் சரிவர பராமரிக்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர்.

7 ஏக்கர் நிலம்: எனக்கு 7 ஏக்கர் நிலம், 3 மீன் குட்டைகள், 250 தென்னை மரம், 2 மாடி வீடு போன்ற சொத்துக்கள் உள்ளன. எனது சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் 2 மகன்கள் பெற்றுகொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால் மருமகளில் ஒருவர் நாங்கள் கட்டிய வீட்டை எங்களை குடியிருக்க விடாமலும், உணவு கொடுக்காமலும் என்னையும், எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
வயதான காலத்தில் எங்களைகொடுமைப்படுத்துகின்றனர். எனவே எனது பெரிய மகனிடம் இருந்து சொத்து ஆவணங்களை மீட்டு தர வேண்டும். அவ்வாறு மீட்டு தந்தால் 4 மகன்களுக்கு பாகம் பிரிக்க உதவியாக இருக்கும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரைவில் பரிசீலத்து, உரிய நடவடிக்கையை எடுப்பார் என்று நம்பப்படுகிறது.
சொத்துக்கள்: பொதுவாக, ஒருவர் தன்னுடைய சொத்துக்களை இன்னொருவருக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டால், கொடுத்த சொத்தை மறுபடியும் திரும்ப பெற முடியாது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை. ஏராளமான காரணங்களால், சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை தந்து விடுகிறார்கள். வாரிசுகளும் அந்த சொத்தை வாங்கிக்கொண்டு, பெற்றோரை கவனிக்காமலும், கண்டுகொள்ளாமலும் நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்கள்.
இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், நிர்க்கதியற்ற வயதான பெற்றோர்கள், மாவட்ட கலெக்டர்களிடம் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கும் வந்துவிடுகிறார்கள்.
செட்டில்மென்ட் பத்திரம்: எனவே, தான் சம்பாதித்த சொத்தை, அந்த செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்று பலரும் பலமுறை ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்... அதனால்தான், "சட்ட விதிகளுக்கு உட்பட்டு" வருவாய் துறையும் இதில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..
சமீபத்தில் வருவாய் துறை அதிகாரிகள் இதுகுறித்து சில கருத்துக்களையும் கூறியிருந்தனர். அதில், "குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டும், செட்டில்மென்ட் பத்திரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதனால், புதிதாக சொத்து வாங்கும்போது, அதை விற்பவர் செட்டில்மென் பத்திரம் வாயிலாக பெற்றவராக இருந்தால், அதில் ஆட்சேபனை ஏதாவது பதிவாகி உள்ளதா? சொத்தின் மீது வருவாய் துறையில் ஏதாவது நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
கவனம் தேவை: பெற்றோருக்கும், வாரிசுகளுக்கும் இடையிலான பிரச்சனையால், அந்த சொத்தை வாங்க வரும் நபர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படகூடாது. எனவே, சொத்து வாங்கும்போது, அதன் செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பான பிரச்சனைகள் என்னென்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும் என்று வருவாய்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications