அம்மா போய்ட்டியே! பால் ஊற்றிய மகளுக்கு 105 வயது மூதாட்டி இன்ப அதிர்ச்சி! உரல் சத்தம் கேட்குதா? அடடே
தஞ்சாவூர்: தோல் சுருங்கிய முகம்.. ஆனாலும் ஊன்றுகோல் உதவியின்றி வேகமாக நடக்கும் 105 வயது மூதாட்டி தான் தற்போது தஞ்சாவூரில் ‛டாக் ஆப் தி’ டவுன் ஆக மாறி உள்ளார். உடல் நல பிரச்சனையால் இறந்துவிட்டார் என நினைத்து மகள் மற்றும் உறவினர்கள் பால் ஊற்றிய நிலையில் திடீரென்று எழுந்து வெற்றிலை - பாக்கு இடித்து வாயில் போட்டு மென்று உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் இந்த மாரியாயி. இவர் யார்? என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரங்கோட்டை ஊராட்சியில் அமைந்திருக்கிறது தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமம். இங்கு வசித்து வருபவர் மாரியாயி. இவருக்கு 105 வயது ஆகிறது.

வயது 100யை கடந்தாலும் கூட மாரியாயின் சுறுசுறுப்பு மட்டும் குறையவே இல்லை. ஊன்றுகோல் இன்றி யாருடைய சப்போர்ட்டும் இன்றி மாரியாயி வீட்டில் நடமாடி வருகிறார்.
மாரியாயிக்கு மொத்தம் 2 மகள்கள். 70 வயதில் சுப்பம்மாள், 68 வயதில் செல்லம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மாரியாயின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் மாரியாயி தனது மூத்த மகள் சுப்பம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 6 பேர பிள்ளைகள், 14 கொள்ளு பேர பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியாயிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
நடிகர் பெஞ்சமினை விரட்டிய மக்கள்! ஜூஸ் பாட்டிலில் இருந்த போட்டோவால் கோபம்.. மதமாற்ற குற்றச்சாட்டு
இதையடுத்து அவர் படுத்த படுக்கையாக இருந்தார். வயது முதிர்வால் அவர் இறந்துவிடுவார் என்று மகள் மற்றும் குடும்பத்தினர் நினைத்தனர். இதையடுத்து மகள் மற்றும் உறவினர்கள் பால் ஊற்றினர். அதன்பிறகும் மாரியாயி எழுந்திருக்கவில்லை. இதனால் மாரியாயி இறந்ததாக அவர்கள் நினைத்து உறவினர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினர்.
ஆளுநர் ஆர்என் ரவி மாற்றம்? புதிய கவர்னராகும் மாஜி மத்திய அமைச்சர்? தமிழகத்துக்கு நெருக்கமானவராச்சே
இந்த வேளையில் ‛‛நான் சாகவில்லை. இன்னும் என் வாழ்க்கை முடியவில்லை’’ என கூறும் வகையில் திடீரென்று மாரியாயி கண்விழித்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுமட்டுமின்றி மாரியாயி மீண்டும் தனது வழக்கமான பணியை செய்ய தொடங்கினார். அதாவது அவருக்கு வெற்றிலை, பாக்கு சுவைக்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் அவர் வெற்றிலை, பாக்கை சிறிய உரலில் போட்டு இடித்து வாயில் போட்டு மெல்ல தொடங்கினார்.
இதுபற்றி மாரியாயின் மகள் சுப்பம்மாள் கூறுகையில், ‛‛என் தாய் பெயர் மாரியாயி. காய்ச்சலால் போய்விட்டதாக நினைத்தோம். 3 பேர் மாலை கொண்டு வந்து விட்டனர். ஆனால் அதற்குள் எழுந்து உட்கார்ந்துவிட்டார். துணி துவைக்கிறது.. வெற்றிலை - பாக்கி இடிக்கிறது என அனைத்து வேலைகளையும் அவரே செய்து கொள்வார்’’ என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications