தஞ்சாவூர் பள்ளிவாசலில் காலணியுடன் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர்! கடும் நடவடிக்கை கோரும் எஸ்.டி.பி.ஐ!
தஞ்சை: தஞ்சாவூரில் பள்ளிவாசலுக்குள் காலணியுடன் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரரை ராணுவ பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
காலணியுடன் சென்று பள்ளிவாசலின் புனிதத்தைக் கலங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல்-அன்சர் பள்ளிவாசலில், நேற்று முன்தினம் அதிகாலை வேளையில், தொழுகைக்கான பாங்கு அழைப்பு விடுத்தபோது, பள்ளிவாசலுக்குள் காலனியுடன் அத்துமீறி தேசிங்கு ராஜா என்பவர் நுழைந்திருக்கிறார்.''
''பள்ளிவாசல் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதோடு, பள்ளிவாசலின் புனிதத்தைக் கலங்கப்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார். இராணுவத்தில் பணிபுரிவதாக கூறப்படும் தேசிங்கு ராஜா, ஜமாத்தார்கள் மற்றும் அமைப்புகளின் புகாருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்''.
''இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இராணுவ பணியிலிருந்தும் நிரந்ததமாக நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications