காவிரி விவகாரம் கையில் எடுத்த தேமுதிக உண்ணாவிரதம்.. யாருடன் கூட்டணி பிரேமலதா சொன்ன பதில் என்ன?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: நதிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதுதான் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். காவிரி தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால் காவிரி நதிநீர் பிரச்சினை இந்த ஆண்டு தலை தூக்கியுள்ளது. மழை பெய்யாததை காரணம் காட்டி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகா. திறந்து விடப்படும் சிறிதளவு நீரையும் தரக்கூடாது என்று கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கிறது. பந்த் நடத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர் கர்நாடக மாநில மக்கள்.

Cauvery issue DMDK Workers hunger strike in Thanjavur lead by Premalatha

இந்த நிலையில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தேமுதிக இன்று தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறது. இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது. இதையொட்டி கர்நாடக அரசை கண்டித்தும், இவ்விவகாரத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தேமுதிக சார்பில் புதன்கிழமை தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எல்லாமே அரசியல்தான் என்றார். ஜூன், ஜூலை மாதம் வந்தாலே காவிரி நதிநீர் பிரச்சினை வந்து விடுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பதுதான் என்று கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் சரியாக தூர் வாரப்படாத காரணத்தால் பல பகுதிகளுக்கு தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை. தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

காவிரி பிரச்சினைக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் தான் என்று கூறினார் விஜயகாந்த். லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+