இதுதான் ஸ்டாலின்! ஒரே நாளில் தஞ்சை, சேலம், தூத்துக்குடிக்கு குட் நியூஸ்! ஐடி உலகில் டைடல் புரட்சி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் இன்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தியாவில் ஐடி புரட்சியை ஏற்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னோடி. சென்னையில் முதல் ஐடி பூங்காவை கொண்டு வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்தது. ஆனால் அதன்பின் ஐடி பூங்காங்கள் பெரிய அளவில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.

 CM MK Stalin to lay the foundation stone for Mini Tidel Parks at Salem, Tuticorin & Thanjavur

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில நிறுவனங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டாலும் முழுமையாக சென்னையை போல பெரிதாக எங்கும் பல ஐடி நிறுவனங்கள் வரவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 2022 பட்ஜெட்டில் புதிய டைடல் பூங்காக்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திம் மின்கல பூங்கா, பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் ரூ4,500 கோடியில் சர்வதேச அறைக்கலன் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும். விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்

பின்தங்கிய 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். சிறு, குறு தொழில் சிக்கல்களை ஆராய குழு அமைக்கப்படும் .

ஓசூரில் கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்படும். தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும். ரூ225 கோடியில் கோவையில் 500 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். ரூ165 கோடியில் 2 நிதிநுட்ப நகரங்கள் உருவாக்கப்படும். இதற்காக நிதிநுட்ப கொள்கை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் நியோ டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போலவே இன்று சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் இன்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

பல்வேறு ஐடி நிறுவனங்களை தொடங்கும் விதமாக இங்கே டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க ஐடி பூங்காக்களை விரிவுபடுத்தும் விதமாக ஐடி பார்க்குகள் கொண்டு வரப்படுகின்றன.

92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

பிடிஆர் :

முக்கியமாக ஐடி துறை அமைச்சராக பிடிஆர் பதவி ஏற்றுள்ள நிலையில் இந்த நிலையில் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சராக பிடிஆர் வெளியிட்டவைதான் மேற்கண்ட அறிவிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் புதிய ஐடி துறை அமைச்சராக பதவி ஏற்று இருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும்.

1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை பிடிஆர் ஏற்படுத்த வேண்டும். பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும்.

பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில்தான் சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் இன்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+