ஒரத்தநாட்டில் சீரழிக்கப்பட்ட இளம்பெண்.. காயத்தோடு சென்றவரை விரட்டிய அரசு மருத்துவர்கள்! ஷாக் தகவல்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், திமுகவைச் சேர்ந்த கவிதாசன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை என பரபரப்பு புகார் எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அந்த பெண் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அந்த இளம் பெண் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த தெற்கு கோட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அங்கு மறைந்திருந்த கவிதாசனின் நண்பர்களான திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இதனை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதை அடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாலியல் வன்கொடுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கவிதாசனும் அந்த இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தபோது தனியாக சந்திக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்று கவிதாசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் கத்தி முனையிலும் பீர் பாட்டிலை உடைத்தும் மிரட்டி அந்த இளம் பெண்ணை நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாசன் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைத்து போலிசார் தனி தனியாக விசாரணை நடத்தினர். அப்போது தப்பியோட முயன்றபோது கவிதாசனின் கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அதிர்ச்சி தரும் விதமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை என பரபரப்பு புகார் எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதாவது பாலியல் வன்கொடுமை நடந்த அன்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி) கொடுமையான தாக்குதலுக்கு உள்ளான அந்த இளம் பெண் முதலுதவி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி அவரை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அந்த பெண் விசாரணையின் போது நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில் ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி அழகேசன், சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காதது ஏன்? சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனையில் அன்று பணியில் இருந்த மருத்துவ அலுவலர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என விளக்கம் கேட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஏன் சிகிச்சை அளிக்க ஏன் மறுத்தார்கள் என்பதற்கான காரணத்தை 27ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications