Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விட்ரு செல்லம்".. ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. ஜெயலட்சுமி கேட்கலியே.. லாஸ்ட்ல அண்டாவுக்குள் போன "பாட்டி"

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: அண்டாவுக்குள் கிடந்த பாட்டியை பார்த்ததுமே போலீசாருக்கு தூக்கிவாரிப்போட்டது.. கடந்த 2 நாட்களாகவே இந்த தஞ்சை சம்பவம் குறித்த பல்வேறு தகவல் வெளியாகிய நிலையில், உண்மையான காரணத்தை போலீசார் தற்போது வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்துள்ளது பண்டாரவாடை கரை தெரு.. இங்கு வசித்து வந்தவர் செல்வமணி.. 55 வயதாகிறது.. இவரது கணவன் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

செல்வமணிக்கு 2 மகன்கள், 3 மகள்கள் இருக்கின்றனர்... இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், இன்னொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.

 சந்தேகம்

சந்தேகம்

3 மகள்களுக்குமே திருமணமாகிவிட்டது.. அவரவர் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்... இதில் ஒரு மகள் கீதா வெளிநாட்டில் இருக்கிறார்... இந்த நிலையில், கடந்த 23ம் தேதியிலிருந்து, மறுநாள்வரை செல்வமணியின் வீடு பூட்டி இருந்தது.. பொதுவாக செல்வமணி வீட்டைவிட்டு எங்குமே செல்லமாட்டாராம்.. அதனால், அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு சந்தேகம் அடைந்து, மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர்.. ராஜலட்சுமியும் வீட்டுக்கு வந்து, பூட்டப்படிருந்த கதவின் ஓரம் நின்று வீட்டிற்குள் ஏதாவது சத்தம், வாசனை வருகிறதா என்று சோதனையிட்டார்... அப்போது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார்... இதனால் பயந்துபோன ராஜலட்சுமி, அங்கிருந்தோரின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

 பித்தளை அண்டா

பித்தளை அண்டா

அப்போது, செல்வமணி பெரிய பித்தளை பாத்திரத்தில் சடலமாக கிடந்தார்.. அந்த பித்தளை குண்டானில் தலைகீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.. இதுகுறித்து பாபநாசம் போலீசாருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து வந்து, செல்வமணியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வமணியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடந்தது.. அப்போது, செல்வமணியின் பேத்தியான ஜெயலட்சுமி என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.. ஜெயலட்சுமிக்கு 28 வயதாகிறது.. இவர், செல்வமணியின் இன்னொரு கீதாவின் மகள் ஆவார்..

 ஜெயலட்சுமி

ஜெயலட்சுமி

கீதா வெளிநாட்டில் வேலை பார்த்தாலும், செல்வமணிக்கு, மாதா மாதம் பணம் அனுப்புவாராம்.. ஆனால், இது ஜெயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. அதனால், பாட்டி செல்வமணியிடம், தன்னுடைய அம்மா அனுப்பிய பணத்தை திரும்ப கேட்டு தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்குமே தகராறு நடந்து வந்துள்ளது.. அந்தவகையில், கடந்த 23ம் தேதியும், செல்வமணியின் வீட்டுக்கு சென்ற பேத்தி ஜெயலட்சுமி, மறுபடியும் தன் அம்மா அனுப்பிய பணத்தை திருப்பி தருமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு செல்வமணி மறுக்கவும், ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, பாட்டி செல்வமணியை கீழே தள்ளிவிட்டார்.. இதில் செல்வமணியின் தலை, தரையில் பட்டு இறந்துவிட்டதாக தெரியவந்தது.

 வீரசிங்கம்பேட்டை

வீரசிங்கம்பேட்டை

எனினும், சொந்த பாட்டியை கொலை செய்யும் அளவுக்கு செல்வதற்கு, வெறும் பணம் விஷயம்தான் காரணமாக இருந்திருக்க முடியும் என்று போலீசார் நம்பவில்லை.. அதனால், விசாரணையை விரிவுபடுத்தினர்.. அப்போதுதான், கொலையின் பின்னணி வெளியே தெரிந்தது.. ஜெயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது.. 2 வயதில் மித்ரன் என்று ஆண் குழந்தை உள்ளது.. கணவர் ரமேஷுடன் வீரசிங்கம்பேட்டையில் வசித்து ஜெயலட்சுமி வருகிறார். ஆனால், எப்போதுமே கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பாராம்.. அங்கே தகராறு செய்துவிட்டு, உடனே பாட்டி வீட்டுக்கு வந்துவிடுவாராம் ஜெயலட்சுமி..

 ஆண் நண்பர்கள்

ஆண் நண்பர்கள்

அதுமட்டுமல்ல, ஜெயலட்சுமிக்கு நிறைய ஆண்நண்பர்கள் இருந்திருக்கிறார்கள்.. இந்த விஷயம் பாட்டிக்கு தெரிந்துள்ளது.. அதனால், பேத்தியை கண்டித்து வந்துள்ளார்.. வழக்கம்போல் கணவரிடம் தகராறு செய்துவிட்டு, சம்பவத்தன்று காலை 11 மணிக்கு, ஜெயலட்சுமி, அவரது மகன் மித்ரனுடன் பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.. பிறகு 3 பேரும் சேர்ந்து கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தனர்... அன்று இரவு, ஜெயலட்சுமி ஆண் நண்பர்களுடன் பேசியிருக்கிறார்.. இதனால் ஆத்திரப்பட்ட பாட்டி, ஆண் நண்பர்களுடன் பழகுவதையும், அவர்களுடன் உள்ள தொடர்பையும் விட்டுவிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார்..

 பின்மண்டை

பின்மண்டை

தொடர்ந்து இப்படியே நடந்து கொண்டிருந்தால், மகள், மருமகனிடம் சொல்லிவிடுவேன் என்றும் பாட்டி எச்சரித்துள்ளார்.. இதுதான் ஜெயலட்சுமிக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. பாட்டியின் காலை பிடித்து வாரி தள்ளிவிட்டதில், பின்பக்கமாக விழுந்து, பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது... அப்போது வலியால் பாட்டி கத்தி கூச்சலிடவும், உடனே அவரது சேலையை உருவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.. அங்கிருந்த பெரிய அண்டாவுக்குள் சடலத்தை தூக்கி போட்டு மூடிவிட்டு வைத்திருக்கிறார்..

 20,000

20,000

பின்னர் வெளிப்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.. கொலை பற்றி தனக்கு தெரியாதது போல உறவினர்களுடன் வந்து செல்வமணி உடலை பார்த்து ஒப்பாரி வைத்து நாடகமாடி உள்ளார்.. இவ்வளவும் தெரியவந்ததையடுத்து, ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்தனர்... அதைவிட முக்கியமாக, இவரது அம்மா, பாட்டிக்கு அனுப்பும் பணத்தில் இருந்து, 20,000 ஆயிரம் ரூபாய், தங்க மோதிரத்தை திருடி கொண்டுபோய் தன்னுடைய வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். அவைகளை போலீசார் கைப்பற்றி, ஜெயலட்சுமியிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+