மிரட்டுது டெங்கு.. மேற்கு மண்டலத்தில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்! காஞ்சிபுரத்திலும் அதிகமாம்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது எனவும், டெங்கு காய்ச்சலால் அச்சமடைய தேவையில்லை. அதேசமயம் கண்காணிப்பில் இருந்தால், 80 சதவீதம் வைரஸ் காய்ச்சல்கள் தானாகவே குணமாகிவிடும் என மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) லோகநாயகி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் லோகநாயகி ஆய்வு செய்து, காய்ச்சல் தடுப்பு மற்றும் மருத்துமனையி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

Dengue Fever

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," அனைத்து இடங்களிலும் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 25 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மண்டலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளன. இதேபோல, காஞ்சிபுரத்திலும் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேர்க்கப்படும் அனைவரும் குணமடைகின்றனர். டெங்கு காய்ச்சலால் அச்சமடைய தேவையில்லை.

அதேசமயம் கண்காணிப்பில் இருந்தால், 80 சதவீதம் வைரஸ் காய்ச்சல்கள் தானாகவே குணமாகிவிடும். காலியாக உள்ள செவிலியர், செவிலிய உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான பணி நடைபெறுவதால், ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பட்ஜெட்டில் தமிழக முதல்வர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. டி பார்ம் படிப்பை பி. பார்மஸி என்ற படிப்பாக மேம்படுத்தி 60 இருக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நர்சிங் பள்ளியில் 100 இடங்கள் இருந்த நிலையில், 150 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இணை மருத்துவப் படிப்பிலும் மாணவர் சேர்க்கை இடங்கள் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. பி.எஸ்ஸி. உளவியல், எம்.எஸ்ஸி. உளவியல் படிப்புகளைத் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார் லோகநாயகி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+