இவருமா.. அதிமுகவில் திமுகவிற்கு தாவப்போகும் டெல்டாவின் முக்கிய புள்ளி? ஸ்டாலினுக்கு பாராட்டு
தஞ்சாவூர் : அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். தளபதி ஸ்டாலின் அவர்கள் மிக சிறப்பாக ஆட்சி செய்வதை தமிழக மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் தானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவரும் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவப்போகிறாரா என்ற பரபரபபு அதிமுகவில் எழுந்துள்ளது.
Recommended Video
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை அதிமுக எம்பியாக பரசுராமன் பதவி வகித்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் டிஆர் பாலுவை 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் தோற்கடித்த பெருமை பரசுராமனை சேரும். தஞ்சை புதிய பேருந்து நிலையம் ரகுமான் நகரில் வசித்து வரும் அவர், அதிமுகவில் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் மற்றும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

பரசுராமன்
தஞ்சை மாவட்ட அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் பரசுராமன் இருந்துள்ளார். மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உள்ளது.

வேலை மோசடி
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2017ம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தரவில்லை என்று இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்தது . இந்நிலையில் இதுகுறித்து மறுப்பு தெரிவிக்க செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது தான் வேலை வாங்கி தருவதாக யாரிடமும் பணம் பெறவில்லை என்றும் தனது பெயரை பயன்படுத்தி யாரேனும் பணம் பெற்று இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .

வாழ்த்துக்கள்
அதன் பின்னர் பேசுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டையும் தமிழக அரசின் செயல்பாட்டையும் பாராட்டி பேசினார் . அப்போது இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றும் மக்களாட்சி தத்துவத்தின் படி பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதல்படி அவருடைய கொள்கையை பின்பற்றி மிக சிறப்பாக ஆட்சி செய்கின்ற தளபதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்துவதில் கடமைப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்,

திருக்குறள் மேற்கோள்
மேலும் இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை விட்டுக்கொடுத்து இருக்கிறார்களோ தளபதி ஸ்டாலின் அவர்கள் மிக சிறப்பாக ஆட்சி செய்வதை தமிழக மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் தானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் பரபரப்பு
அதிமுக முன்னாள் எம்பியாக இருந்து தற்போது திமுக அரசை பாராட்டியது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் மாற்று கட்சியிலிருந்து திமுகவிற்கு செல்லும் அதிமுக நிர்வாகிகளை போல இவரும் கட்சி மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
-
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications