தஞ்சை கல்லணை கால்வாயில் மிதந்த சடலங்கள்.. கைக்குழந்தை, தாய் உள்பட 4 பேர் தற்கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக் கால்வாயில் குதித்து தாய், கைக்குழந்தை உள்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்வாய் ஆற்றில் மிதந்து வந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் சடலங்களை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர், 20 கண் பாலம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றில் 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் சடலங்கள் ஆற்றில் மிதந்து வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 3 சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் என்பது குறித்து தெரியவில்லை.

கைக்குழந்தையின் உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் ஒரு பெண் திருமணமானவர். மற்றொருவர் திருமணமாகாதவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அப்பகுதியில் நடந்து வருவதை எதிர்கரையில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். தற்கொலை செய்தவர்களின் அடையாளம் மற்றும் விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை. சடலங்களாக மீட்கப்பட்ட இளம்பெண்களின் கைகளில் பச்சை குத்தப்பட்டுள்ளன. அந்தப் பெயர்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications