தஞ்சையில் வெறும் 3 அடி நீள கண்ணாடி விரியன்.. மலைபோல் போட்ட குட்டிகள்.. அடுத்தடுத்து 22 பாம்புகள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நிறைமாத கர்ப்பமாக இருந்து. காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது கண்ணாடிவிரியன். அந்த கண்ணாடி விரியன் பாம்பு நேற்று 22 குட்டிகளை ஈன்றுள்ளது. விரைவில் வனத்துறையினருடன் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் உள்ள விஷப்பாம்புகள் மூன்று தான்.. ஒன்று நாகப்பாம்பு, அதாவது நல்ல பாம்பு.. அடுத்ததாக சுருட்டை விரியன்.. மூன்றாவதாக கண்ணாடி விரியன். இந்த மூன்று பாம்புகள் தான் தமிழகத்தில் அதிகமாக இருக்கின்றன. அதிக விஷத்தன்மை வாய்ந்தவை. மற்ற பாம்புகள் பெரும்பாலும் சிக்கல் இல்லை..

glass viper gives birth to 22 cubs in Thanjavur What you need to know about the glass snake

வெப்பமான இடங்கள்

நாகப்பாம்பில் பூ நாகம், கரு நாகம் என்ற வகைகளும் உள்ளன. சிறிய அளவில் உள்ள நாகப்பாம்புகள், சுருட்டை, கண்ணாடி விரியன் போன்றவை ஷூவிற்குள் பதுங்கக்கூடியவை. அதேபோல் வாகனத்திலும் பதுங்கக்கூடியவை. வெப்பமான இடத்தை தேடி வந்து அடைக்கலம் புகுந்துவிடும் இந்த பாம்புகள் கடித்தால் உடனே மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டும். எவ்வளவு விரைவாக கூட்டி செல்ல முடியுமோ, அந்த அளவிற்கு கூட்டி செல்ல வேண்டும்.

22 குட்டிகள் போட்டுள்ளது

தஞ்சையில் கண்ணாடி விரியன் பாம்புகள் 22 குட்டிகளை போட்டிருக்கிறது. தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளது.

கண்ணாடி விரியன் இனப்பெருக்க காலம்

இதையடுத்து தஞ்சையில் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது கண்ணாடிவிரியன். அந்த கண்ணாடி விரியன் பாம்பு நேற்று 22 குட்டிகளை ஈன்றுள்ளது. விரைவில் வனத்துறையினருடன் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம் பொதுவாக மழைக்காலத்திற்குப் பிறகு அதாவது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும். இப்பாம்புகள் குட்டி போடும் காலம் அடுத்த ஆண்டு மே முதல் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வரை இருக்கும்.ஒரு கண்ணாடி விரியன் பெண் பாம்பு, ஒரே நேரத்தில் சுமார் 20 முதல் 60 குட்டிகள் வரை ஈனும். சில சமயங்களில் 70-க்கும் மேற்பட்ட குட்டிகள் கூட போடும்.

குட்டிக்கு விஷம் அதிகம்

கண்ணாடி விரியன் பாம்புகள் குட்டி ஈனும் வகையைச் சேர்ந்தவை (viviparous) ஆகும். முட்டையிடுபவை அல்ல. புதிதாகப் பிறந்த குட்டிகள் பிறந்த உடனேயே முழுமையான விஷத்தன்மையுடன் இருக்கும். அவற்றின் விஷத்தின் வீரியம் பெரிய பாம்பின் விஷத்திற்குச் சமமாகவோ அல்லது சில சமயங்களில் அதைவிட அதிகமாகவோ கூட இருக்கும். எனவே, புதிதாகப் பிறந்த குட்டிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கண்ணாடி விரியன் விஷம் எப்படிப்பட்டது

கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் என்பது இரத்தம் உறையாமையை ஏற்படுத்தும் விஷம் (hemotoxic venom) வகையைச் சேர்ந்தது ஆகும். இது உடலில் பல முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இரத்த உறைவு குறைபாடு தான் ஏற்படும். இந்த விஷம் இரத்த உறைவு மண்டலத்தை (blood coagulation system) நேரடியாகப் பாதித்து, இரத்தம் உறைவதைத் தடுக்கும். இதனால், கடித்த இடத்தில் இரத்தம் நிற்காமல் வெளியேறிக்கொண்டே இருக்கும்.

சிறுநீரக செயலிழப்பு

விஷம் பரவும்போது, உள் உறுப்புகளில் இரத்தக் கசிவு, வீக்கம், மற்றும் திசுக்கள் சிதைவு (tissue damage) போன்றவை ஏற்படலாம். இந்த விஷம் சிறுநீரகங்களைப் பெரிதும் பாதித்து, சிறுநீரகச் செயலிழப்புக்கு (kidney failure) வழிவகுக்கும். கண்ணாடி விரியன் பாம்பு கடி என்பது மிகவும் ஆபத்தானது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று விஷமுறிவு மருந்து பெற வேண்டும்.உடனே உயர் சிகிச்சை பெற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+