"பூண்டி" துளசி அய்யா வாண்டையார் மீது வழக்கு பதிந்த போலீஸ்.. அப்படியே அதிர்ந்த தஞ்சாவூர்.. என்னாச்சு

துளசி அய்யா வாண்டையார் மீது வழக்கு பதிவு செய்துள்ளது தஞ்சை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: மறைந்த துளசி அய்யா வாண்டையார்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

பொதுவாக, இறந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை... அப்படியே, வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் திடீரென இறந்துவிட்டால், அவர்மீதான குற்ற வழக்குகள் அனைத்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விடும்..

ஆனால், இறந்துபோன பூண்டி வாண்டையார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இதற்கு பின்னணி காரணம் என்ன?

பூண்டி கல்லூரியில் 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை பேராசிரியர் பணிநியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. அந்த தகவலின்பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்...

 கற்பகசுந்தரி

கற்பகசுந்தரி

இந்த விசாரணயில், கடந்த 2017-ம் ஆண்டு, உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இன சுழற்சி முறையை பின்பற்றவில்லை என்று சொல்கிறார்கள்.... இதற்கான ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன. உதவி பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி ஆகிய 2 பேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்... ஆனால், இதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று போலியான சாதிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கின்றனர்.. இதை உண்மை என்று சமர்ப்பித்து அரசை ஏமாற்றிய கல்லூரி நிர்வாகம், 2017-ம் ஆண்டு முதல் இப்போது வரை அவர்களுக்கு ஊதியமாக ரூ.55 லட்சம் பெற்று வழங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 துளசி அய்யா

துளசி அய்யா

சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை என்பதை சரிபார்க்காமல், உதவி பேராசிரியர்களாக பேருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.. இதையடுத்துதான், தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் அறிவுடைநம்பி, உதவி பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி, கல்லூரியின் முன்னாள் தாளாளரும், முன்னாள் எம்பியுமான மறைந்த துளசி அய்யா வாண்டையார் உள்ளிட்ட 7 பேர் மீது 6 பிரிவுகளில் கடந்த மாதம் 27-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

இந்த புகார் வழக்கு பதியப்பட்டதால், கல்லூரியில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.. இதைபற்றி போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "பணி நியமனத்தில் நிர்வாகத்தின் தரப்பில் முறைகேடு நடந்திருப்பதாக துளசி அய்யா வாண்டையார் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார், எங்களிடம் புகார் தந்தார்.. அதற்கான ஆதாரங்களும் கிடைத்ததால், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்..

புஷ்பம்

புஷ்பம்

மறைந்த வாண்டையார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தந்து வருகிறது. தஞ்சாவூர் என்றாலே சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முதலில் கண்முன் வந்து நிற்கும் பெயர் துளசி வாண்டையார்தான்.. இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆவார்.. பூண்டி கிராமத்தில் புஷ்பம் கலைக் கல்லூரியை 1956ல் துவங்கி, வெகு சிறப்பாக நிர்வகித்து வந்தார்... எத்தனையோ ஏழை மாணவர்கள் கல்வி கிடைக்கும் வகையில் இந்த கல்லூரியை திறன்பட நடத்தியவர்..

"கல்வி வள்ளல்"

தமிழகத்தின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் பல மாணவர்கள் இங்கு கல்வி கற்க முன்வந்தனர்.. கூடுதல் கட்டணம் இதுவரை இந்த கல்லூரியில் வசூலித்ததில்லை என்ற பெயரை பெற்றதால், மக்களிடம் வாண்டையாருக்கு நன்மதிப்பு கூடியது. அந்தவகையில், பல மாணவர்களை படிக்க வைத்து உருவாக்கிய பெரும் வாண்டையாருக்கு உண்டு.. நாளடைவில் "கல்வி வள்ளல்", "கல்வி காவலர்" என்ற பட்டப்பெயர்கள் வாண்டையாருக்கு வந்து சேர்ந்தது.. 1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதி எம்பியாக இருந்துள்ளார்..

 துளசி வாண்டையார்

துளசி வாண்டையார்

ஆனால், ஆரம்ப காலத்தில் இருந்தே காங்கிரஸில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டவர்.. ராஜாஜி, காமராஜர் இந்திரா காந்தி போன்ற மாபெரும் தலைவர்களுடன் நெருங்கிய பழக்கமுடையவர்.. தஞ்சை மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டவர்.. நிறைய நூல்களை எழுதியுள்ளார்.. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் கற்றவர்.. கல்விக்கு முக்கியத்துவம் தந்ததால்தான், தன்னுடைய கல்லூரியில்கூட நூலகத்திற்கென்றே தனி வளாகம் ஏற்படுத்தி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.. ஒரு லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் இடம்பெற்றுள்ள இந்த நூலகம் நாட்டின் சிறந்த நூலகங்களுள் ஒன்று என்ற பெருமையை பெற்றது..

வாண்டையார்

வாண்டையார்

தன்னுடைய 93 வயதில் வாண்டையார் இறந்துவிட்டார்.. இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாண்டையார் மீது புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த பகுதி மக்களுக்கு வேதனையை தந்து வருகிறது. அவர் மறைவுக்குப் பிறகு அவர் மகன் கிருஷ்ணசாமி பொறுப்பேற்று கல்லூரியை நிர்வகித்து வருகிறார். இதைவிட முக்கியமான ஹைலைட், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கிருஷ்ணசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+