காலேஜ் கழிவறையில் குவா குவா! தனக்குத் தானே பிரசவம் பார்த்த மாணவி! எல்லாம் ’அதை’ பார்த்து வந்த வினை!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரியில் உள்ள கழிவறையில் குழந்தை பெற்றெடுத்ததோடு அதனை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் பிரசவம் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே கும்பகோணத்தில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. கும்பகோணம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி வழக்கம் போல் மருத்துவமனையில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யாரிடமும் சொல்லாமல் திடீரென கழிவறைக்கு சென்றிருக்கிறார் அந்த மாணவி. அங்கு அவருக்கு பிரசவம் நடந்ததாக கூறப்படுகிறது. பெண் குழந்தை பிறந்து நிலையில் அந்த குழந்தையை ஒரு துணியில் சுற்றி கல்லூரியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல வகுப்பறையில் அமர்ந்திருக்கிறார் அந்த மாணவி. அவரது ஆடைகளில் ரத்தக்கரை இருந்ததை கண்ட சக மாணவிகள் அவரிடம் இது குறித்து கேட்டபோது தனக்கு மாதவிடாய் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே ரத்தப்போக்கு அதிகமானதால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனால் அச்சமடைந்த பேராசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாணவி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த போது சில மணி நேரத்திற்கு முன்பு தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை அடுத்து பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் அதனை கல்லூரியில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டதை தெரிவித்தார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் உடனடியாக கல்லூரிக்கு தகவல் தெரிவித்து குப்பைத் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவிக்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறிது தாமதித்திருந்தாலும் அந்த பெண் குழந்தை குப்பை தொட்டியிலேயே மரணத்தை சந்தித்திருக்கும். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆடுதுறை மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவி இடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஆண் நண்பருடன் பழகியதால் திடீரென கர்ப்பம் அடைந்ததாகவும், ஆனால் கர்ப்பத்தை கலைக்க முடியாத நிலையிலே தான் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததால் குழந்தையை பெற்றெடுத்து அதனை மறைத்து விடலாம் என முடிவு செய்ததாக கூறி அதிர வைத்திருக்கிறார்.
மேலும் எப்படி பிரசவம் நடக்கிறது என்பது குறித்து யூடிபில் தொடர்ந்து வீடியோக்களை பார்த்து வந்ததாகவும் தொடர்ந்து கல்லூரியில் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது யூடியூபில் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து அதற்குப் பிறகு அதனை குப்பைத் தொட்டியில் வீசியதாக கூறியிருக்கிறார். இதற்கிடையே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications