Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறுக்கே வந்த மகாராணி.. கோபமடைந்த சுபாஷ்.. கடித்து குதறி.. அடித்து உதைத்து.. ஆள் எஸ்கேப்!

மனைவியை கடித்து துன்புறுத்திய கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கள்ள காதலுக்கு மனைவி மகாராணி குறுக்கே நிற்பதால், சுபாஷுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.. அதனால் உருட்டுக்கட்டையை எடுத்து மகாராணியை அடித்ததுடன், அவரை கடித்தும் குதறியும் எடுத்துவிட்டார்.

இந்தியாவில் தற்போது லாக்டவுன் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. வடமாநிலங்களில் இதன் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.. அந்த வகையில் தமிழகத்திலும் ஊரடங்கில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவது பெருத்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

 lockdown crimes: husband attacked his wife near tanjore

சாதாரண குடும்ப சண்டை முதல் கொலைவரை நடப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ளது திருமங்கலக்கோட்டை கீழையூர்.. இங்கு வசித்துவருபவர் சுபாஷ் சந்திர போஸ்.. இவரது மனைவி மகாராணி.. கல்யாணமாகி 10 வருஷங்கள் ஆகிறது.. 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் சுபாஷுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக உருவானது.. விஷயம் மகாராணிக்கு தெரிந்து கொதித்து போய்விட்டார். அந்த பெண்ணுடன் பழக கூடாது என்று கண்டித்தார்.. பலமுறை இதை வைத்து இருவருக்கும் தகராறு வந்ததே தவிர, சுபாஷ் தன்னுடைய காதலை கைவிடவே இல்லை.

சம்பவத்தன்றும் வீட்டில் சண்டை ஆரம்பமானது.. என்ன ஆனாலும் சரி, கள்ளக்காதலை விட போவதில்லை என்று உறுதியாக சொல்லவும் வாக்குவாதம் அதிகமானது.. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த அவர், மகாராணியை உருட்டுக்கட்டையால் அடித்து தாக்கிவிட்டார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அவரை கடித்து குதறி காயப்படுத்தினார்.

வலி தாங்காமல் மகாராணி அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் சுபாஷ் எஸ்கேப் ஆகிவிட்டார்.. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுபாஷை சந்திர போஸை வலைவீசி தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+