குளுக்கோஸ் வயருக்கு பதிலாக 14 நாள் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு?.. தஞ்சையில் அலட்சியம்?
தஞ்சை: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் தவறுதலாக துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் அவருக்கு கடந்த 25ஆம் தேதி தஞ்சை இராசமிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை குறைமாதத்தில் பிறந்ததாலும் வயிற்றில் பிரச்சினை இருப்பதாலும் தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. குழந்தை விரலை அசைக்காமல் இருப்பதற்காக உள்ளங்கையில் முட்டுக் கொடுக்க ஒரு பஞ்சு அட்டை வைக்கப்பட்டு கையில் பேண்டேஜ் சுற்றப்பட்டிருந்தது.

ஊசி
நேற்றைய தினம் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து கையில் போட்டிருந்த ஊசியை அகற்ற வார்டுக்கு செவிலியர் வந்தார். அவர் அந்த பேண்டேஜை கத்திரியால் கட் செய்தார்.

குழந்தையின் கட்டை விரல்
அப்போது அலட்சியபோக்கால் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் கூறுகிறார்கள். மேலும் மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனையில் குழந்தையின் கட்டை விரல் அகற்றப்பட்ட இடத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவம்
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் ஆர்எம்ஓ உஷா தேவி விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டப்பட்ட விரல்
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில் துண்டிக்கப்பட்ட விரலை ஒட்ட வைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அது சரியாகிவிடும் என்றும் கவலைப்படாமல் இருக்குமாறு கூறியுள்ளார். எனினும் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications