மதம் மாற கட்டாயப்படுத்தியவர்களை தட்டி கேட்ட பாமக பிரமுகர்.. கொடூர கொலை

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கேட்டரிங் ஏஜென்ட்டாக வேலை செய்து வந்தாலும், இவர் பாமக முன்னாள் நகர செயலாளராக இருந்தவர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மதம் மாற கட்டாயப்படுத்தியவர்களை தட்டி கேட்ட பாமக பிரமுகர்- வீடியோ

    கும்பகோணம்: மதம் மாற கட்டாயப்படுத்தியவர்களை தட்டிக் கேட்ட பாமக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கேட்டரிங் ஏஜென்ட்டாக வேலை செய்து வந்தாலும், இவர் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

    நேற்று சமையல் ஆர்டர் ஒன்று வந்ததால், வேலைக்கு ஆட்களை தேடி அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றார். அங்கு சமையல் வேலை தெரிந்தவர்களை சந்தித்து ராமலிங்கம் பேசிக் கொண்டிருந்தார்.

    நன்மைகள்

    நன்மைகள்

    அப்போது 2 பேர் அங்கு ராமலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்த அந்த கிராமத்து நபர்களிடம் மதமாற்றம் குறித்து சொன்னார்கள். பிறகு மதம் மாறினால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்றும் தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தனர்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதனால் உடன் இருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிறகு ராமலிங்கம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் காரிலிருந்து இறங்கிவந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர்.

    அரிவாளால் வெட்டினர்

    அரிவாளால் வெட்டினர்

    இதனால் உடன் இருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிறகு ராமலிங்கம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் காரிலிருந்து இறங்கிவந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர்.

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    இதில் ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ராமலிங்கத்தை அழைத்து கொண்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்தார்.

    போலீசார் குவிப்பு

    போலீசார் குவிப்பு

    மதமாற்றத்தை தட்டிக்கேட்டதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி கும்பகோணத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க திருவிடைமருதூர் மற்றும் திருபுவனத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மறியல்

    மறியல்

    எனினும் ராமலிங்கத்தை படுகொலை செய்தவர்களை கண்டுபிடிக்கக்கோரி திருபுவனத்தில் மறியல் உறவினர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் சமசர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடையடைப்பு

    கடையடைப்பு

    மேலும் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டத்தை கண்டித்து திருபுவனத்தில் கடையடைப்பு போராட்டமும் நடந்தது. இதனால் முக்கிய பகுதிகளில் உள்ள எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒருபக்கம் போராட்டம், கடையடைப்பு என திருபுவனத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராமலிங்கம் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+