Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிணத்த காணோம்னு பாத்தா..தஞ்சாவூர்ல புதைச்ச பொணத்தையே காணோம்! பால் தெளிக்க போனவர்களுக்கு ஷாக்! பரபர!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உடல் நலக் குறைவால் உயிரிழந்த சிறுமியின் உடல் நேற்று மாலை மணியாற்று கரையில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இன்று காலை சடங்குகள் செய்ய சிறுமியின் குடும்பத்தினர் சென்றபோது சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மந்திரவாதிகள் மாந்திரீக பூஜைகளுக்காக சிறுமியின் உடலை தோண்டி எடுத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (48), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (33.) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது இரண்டாவது மகள் தர்ஷிகா (12) பந்தநல்லூர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Thanjavur crime police

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல், நேற்று அவரது குடும்பத்தினரின் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மண்ணியாறு இடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இடுகாடு வழியாக வந்த சிலர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அரசடி கிராம மக்கள் இடுகாட்டில் வந்து பார்த்தபோது சிறுமியின் உடை மற்றும் லேசாக வெளியே தெரிந்துள்ளது. எனவே அவரது உடல் உள்ளே உள்ளதா அல்லது தோண்டி அடுத்த சென்று விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த தகவல் அறிந்து பந்தநல்லூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மண்ணாயாறு இடுகாடு பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலை வருகிறது. மந்திரவாதிகள் மாந்திரீக பூஜைகளுக்காக சிறுமியின் உடலை தோண்டி எடுத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+