சாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்!
சாதி விவகாரம் தொடர்பாக பேசி ஆடியோ வெளியிட்ட கனிமொழி திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
தஞ்சாவூர்: சாதி பிரச்சனையை தூண்டி விட்டதே ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா.. கடந்த 20 நாட்களாக தமிழ்நாட்டையே பரபரப்பாக வைத்திருந்தது ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா.. ஒரு சமுதாய பெண்களின் ஒழுக்கத்தை பற்றி இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த பெண் கேவலமாகவும், இழிவாகவும் பேசி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா.. நம்பித்தான் ஆகணும்.. அவர்தான் கனிமொழி!
கடந்த 16-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை பற்றி தவறாகவும், அந்த ஜாதி பெண்களின் ஒழுக்கத்தை விமர்சித்தும் பேசப்பட்டிருந்தது.
இப்படி ஒரு ஆடியோவை வெளியிட்டது இன்னொரு ஜாதியை சேர்ந்தவர்கள்! அதனால் சம்பந்தப்பட்ட ஜாதியினர் போராட்டத்தில் இறங்கினர். தங்களது எதிர்ப்புகளை ஆக்ரோஷமாக பதிவு செய்தனர்.

ஆடியோ
இதனை அடுத்து, போலீஸ் இந்த விஷயத்தில் தலையிட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு அந்த ஆடியோவில் பேசியவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் என 4 பேரை பேராவூரணியில் கைது செய்தது போலீஸ். மேலும் விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து அந்த ஆடியோ வெளியானது என்று தெரியவந்ததால், அது சம்பந்தமாக 4 பேரை அங்கிருந்து வரவழைத்தும் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் கனிமொழி
இருந்தாலும் இவர்கள் எல்லாம் அம்புகள்தானே தவிர எய்தது யார் அதாவது மூலக்காரணம் யார் என்ற விசாரணை நீண்டு கொண்டு போனது. இப்போது அதனையும் போலீசார் கண்டுபிடித்து விட்டார்கள். சிங்கப்பூரில் இருந்து ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோவை வெளியிட்டது ஒரு இளம்பெண்ணாம்.. அவர் பெயர் கனிமொழி என்பதாம்!

வீட்டு வேலை
இவர் தஞ்சாவூர் அருகே திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டை சேர்ந்தவர் என்றும் 40 வயதான இவர், சிங்கப்பூரில் 10 வருஷமாக இருக்கிறாராம்.. அங்கு வீட்டு வேலைதான் செய்து வந்திருக்கிறார். இவர்தான் தன் சாதி பெண்களை இன்னொரு சாதி மக்கள் மோசமாக பேசிவிட்டார்கள், என்றுகூறி மிகக் கேவலமாக ஆடியோவில் பேசியிருக்கிறார்.

திருச்சி ஏர்போர்ட்
இந்த தகவல் உறுதியானதை அடுத்து போலீசார், 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்திய தூதரகத்தின் உதவியுடன் கனிமொழியை இந்தியாவிற்கு அழைத்து வரும் வேலைகளும் ஆரம்பமானது. அதன்படி நேற்று சாயங்காலம் திருச்சி ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய கனிமொழியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திருவாரூரை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதால், அவரது கைதும் விரைவில் அரங்கேறும் என்று சொல்லப்படுகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications