பள்ளி மாணவர்களை கட்டட வேலை செய்ய வைத்த தலைமை ஆசிரியர்.. அதற்கு அவர் தந்த அடடே விளக்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கட்டட வேலை செய்ய ஈடுபடுத்திய சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலக்குடிமுளை என்ற ஊராட்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்ப்பவர் சரவணன். இவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் அருண் சூசை என்பவரிடம் நிதி வாங்கி, 20 லட்சம் ரூபாயில் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி கட்டுகிறார்கள்.

அந்த கட்டிடத்திற்கு எந்த ஒப்பந்ததாரர்களும் நியமிக்காமல், பள்ளி வளர்ச்சி குழு, தலைமை ஆசிரியர் தலைமையில் இந்த பள்ளியை கட்டி வருகிறார்கள்.
அதற்கு ஒப்பந்ததாரர்கள் வேலை பார்த்தாலும், கல் எடுக்க, மண் எடுக்க,சுவற்றுக்கு தண்ணீர் பிடிக்க போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உள்ளார்கள். அதன் அடிப்படையில் செய்தி வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி தலைமை ஆசிரியர் கூறும் போது, யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பள்ளி மாணவர்கள் தாங்களாக முன் வந்து பள்ளிக்கு வேலை பார்த்தார்கள். அவர்களாக விருப்பப்பட்டு வேலை பார்த்தார்கள் .
எனினும் இது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். இதனிடையே மாணவர்களை எதற்காக கட்டிட வேலை செய்ய அனுமதித்தீர்கள் என்று பெற்றோரும் கேள்வி எழுப்பினார்கள். படிக்கத்தான் எங்கள் பிள்ளையை அனுப்பி உள்ளோம். சித்தாள் வேலை செய்ய பிள்ளைகளை அனுப்பவில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.
ஒப்பந்தம் விட்டுதான் பள்ளி கட்டிடத்தை கட்டியிருக்க வேண்டும் என்றும் ஏன் தலைமை ஆசிரியரே முன் நின்று கட்டிடத்தை கட்டுகிறார் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பள்ளி வளர்ச்சி குழு தான் இந்த பள்ளியை கட்டி வருவதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்தார்.

இதுபற்றி தலைமை ஆசிரியர் சரவணன் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஜேர்சி ஸ்கவுட் மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தி மரங்கன்றுகள் நட்டார்கள். பள்ளியில் பாம்புகள் வரக்கூடாது என்பதற்காக கற்களை எல்லாம் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தோம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்" என்று தலைமை ஆசிரியர் சரவணன் கூறினார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications