லுங்கியில் கட்டி.. ஜெயில் ரூமிலேயே தொங்கிய தஞ்சாவூர் காதலன் அஜித்குமார்.. இப்ப சீரியஸாக இருக்காராம்
தஞ்சாவூர்: ஸ்கூலுக்கு மணியாச்சு.. அப்பறம் பேசிக்கலாம்" என்று காவ்யா சொன்ன அடுத்த நொடியே இந்த பயங்கரம் நடந்துவிட்டது.. தஞ்சை ஆசிரியை காவ்யா படுகோரமான முறையில், பட்டப்பகலில் காதலனால் கொலை செய்யப்பட்டார்.. இப்போது காதலன் சிறையில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, தஞ்சாவூரை வெலவெலக்க வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேலகளக்குடியை சேர்ந்தவர் ஆசிரியை காவ்யா.. ஆலங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த அஜித்குமாரும், காவ்யாவும் 13 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள்.. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அஜித்குமார் பெயிண்டர் வேலை செய்வதால், காவ்யாவின் குடும்பத்தினர் இவர்களது காதலை ஏற்கவில்லை.
பெயிண்டர் காதல்
சமீபத்தில், அஜித்குமார் கோவைக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றிருந்தபோது, காவ்யாவுக்கு அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக, தாய்மாமன் மகனை பேசி நிச்சயதார்த்தமும் செய்திருக்கிறார்கள்..
ஆனால், நிச்சயதார்த்தம் நடந்த பிறகும் காவ்யா வழக்கம்போல் அஜித்குமாருடன் போனில் பேசியிருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு வீடியோ காலில் பேசியபோதுதான், காவ்யா இந்த விஷயத்தை சொல்லி உள்ளார்..
ஆனால், அஜித்குமார் அதை நம்பவில்லையாம். உடனே காவ்யா, நிச்சயதார்த்த போட்டோக்கள், வீடியோக்களை பார்த்த அஜித்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்..
காவ்யா - அஜித் வாக்குமூலம்
மறுநாள் வழக்கம்போல் ஸ்கூட்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காவ்யாவை, கொத்தட்டை காலனி அருகே அஜித்குமார் வழிமறித்துத் தடுத்துள்ளார். அப்போது நிச்சயதார்த்தம் குறித்து கேட்கவும் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது. உடனே மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யவை கொன்றுவிட்ட அஜித்குமார் போலீசில் சென்று சரணடைந்துவிட்டார்.
போலீசாரிடம் அஜித்குமார் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தையும் தந்திருந்தார்.. அதில், 13 வருடங்கள் காதலித்துவிட்டு, எப்படி என்னை ஒரு நாளில் தூக்கி எறிய முடிந்தது? வேறு ஒருவரை திருமணம் செய்ய எப்படி உனக்கு மனம் வருகிறது? உயிருக்கு உயிராக காதலித்தோமே? நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நான் கெஞ்சினேன். ஆனால், காவ்யா மறுத்துவிட்டாள்...
மணியாச்சு, அப்பறம் பேசலாம்
ஸ்கூலுக்கு மணியாச்சு, அப்பறம் பேசிக் கொள்ளலாம் என்று நழுவி செல்ல முயன்றாள்.. அப்போது வந்த உச்சகட்ட ஆத்திரத்தில், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் குத்திக் கொன்றேன் என்று தெரிவித்திருந்தார்.
காதலியை நடுரோட்டில் அதுவும் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், கொலை செய்த சம்பவம் தஞ்சையை அதிர வைத்தது. இதையடுத்து, புதுக்கோட்டை சிறையில் அஜித்குமார் அடைக்கப்பட்டார்..
சிறை அறையிலேயே அதிர்ச்சி முடிவு
இந்நிலையில், அஜித்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் இன்று ஈடுபட்டுள்ளார்.. சிறையில் இருந்த அறையிலேயே லுங்கியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்... அவர் லுங்கியில் தூக்கிட்டு தொங்கியபோது அங்கிருந்த சிறை காவலர்கள் இதை கவனித்து உடனடியாக அவரை மீட்டுள்ளனர்.
மேலிருந்து கீழே அவரை இறக்கி உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். தற்போது அஜித்குமார் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜித்குமாருக்கு சிகிச்சை நடக்கும் நிலையில், சிறைகாவலர்களும் போலீசாரும் அருகிலிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
லுங்கியால் தொங்கிய அஜித்குமார்
ஆனால், அதற்குள் இந்த தகவல் தீயாய் பரவி, அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு கடும் கொந்தளிப்பை தந்துவிட்டது.. அஜித்குமாரின் தற்கொலை முயற்சியில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அதுமட்டுமல்ல, ஜெயிலில் உள்ள போலீஸ்காரர்கள்தான் அஜித்குமாரின் இந்த நிலைக்கு காரணம் என்றும், பாதுகாப்பு குறைவாக உள்ளதா? எதற்காக இப்படியொரு சம்பவ நடந்தது? இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஜித்குமாரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications