Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. இது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இணையத்தில் ஒரு வீடியோ நேற்று முதல் வெளியாகி, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. தஞ்சையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தற்போது கோடை வெயில் அதிகரித்துவிட்டது.. இனி வரும் நாட்களில், இந்த வெப்பம் அதிகரிக்கும் என்றும், வெப்பக்காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதற்கேற்றவாறு, இயல்பான வெப்பத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் கூடுதலாக வெப்பம் நிலவிக்கொண்டிருக்கிறது.

Tanjore Kollidam River and 3 feet lengthy crocodile found in Thanjavur Gandhiraj House

எனவே, தமிழகம் முழுக்க கடுமையான வெயிலுக்கு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.. பொதுமக்களுக்கே இந்த நிலைமை என்றால், கால்நடைகள், விலங்குகளின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டிருக்கிறது. வெப்பம் காரணமாக குடிநீர், உணவு தேடி நிறைய வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய துவங்கிவிடுகின்றன.

தஞ்சாவூர்: அப்படித்தான் ஒரு விலங்கு தஞ்சாவூருக்கு வந்துவிட்டது.. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது கடம்பங்குடி என்ற கிராமம்.. இங்கு காந்திராஜ் என்பவர் வசித்து வருகிறார்.. இவரது வீட்டுக்கு பின்பக்கத்திலேயே தோட்டம் உள்ளது.

எனவே, வழக்கம்போல் இன்று காலை தன்னுடைய தோட்டத்திற்கு வந்துள்ளார்.. அப்போது தன்னுடைய வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மெல்ல மெல்ல நகர்ந்து போவதை பார்த்ததுமே, பாம்பு என்று நினைத்துள்ளார்.. எனவே, அதன் அருகில் சென்று பார்த்திருக்கிறார்.. அப்போதுதான் தெரிந்தது அது பயங்கரமான முதலை..

தோட்டம்: அங்கிருந்து அலறியடித்து கொண்டு, ஓடிவந்த காந்திராஜ், உடனடியாக போலீசுக்கும், வருவாய்த்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தந்தார்.. இதையடுத்து, காந்திராஜ் வீட்டுக்குள் நுழைந்த வனத்துறையினர், வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலையை பிடித்தனர்.. அந்த முதலை 3 அடி நீளம் கொண்டது.. அதனால், முதலையை கயிறு கட்டி இழுத்து பிடித்தனர்...

பிறகு, வாகனம் கொண்டுவந்து, அதில் முதலையை ஏற்றிக்கொண்டு, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பத்திரமாக விடுவித்தனர்... இந்த கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் முதலை வந்திருக்கிறது.. தண்ணீரை தேடி தேடி, இரவெல்லாம் நீண்ட தூரம் பயணம் செய்து, கடைசியாக காந்திராஜ் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார்கள் வனத்துறையினர்.

காந்திராஜ்: திடீரென காந்திராஜ் தோட்டத்துக்குள் போலீசார் உள்ளே நுழையவும், பொதுமக்கள் என்ன ஏதென்று சென்று பார்த்துள்ளனர்.. அங்கேயிருந்த முதலையை பார்த்ததுமே அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்..

அதுமட்டுமல்ல, அவரவர் வீடுகளுக்கு செல்லவும் பயந்துவிட்டார்கள். இங்கே வந்துள்ளதுபோல, எத்தனை வீட்டுக்குள் முதலை வந்திருக்குமோ? இந்த பகுதியில் வேறு எங்காவது முதலைகள் பதுங்கியிருக்கின்றனவா? என்று கதிகலங்கி போய்விட்டார்களாம்..!!

Tanjore Kollidam River and 3 feet lengthy crocodile found in Thanjavur Gandhiraj House

இப்படித்தான் 3 வருடங்களுக்கு முன்பு, தஞ்சாவூர் வடுகக்குடி என்ற கிராமத்தில், வின்சென்ட் என்பவர் வீட்டுக்கு முதலை வந்துவிட்டது. இந்த முதலையும் தண்ணீர் தேடியே வந்தது..

நீர்த்தேக்கம்: இத்தனைக்கும், இந்த வடுகக்குடி அருகே அணை உள்ளது.. இந்த அணைக்கு கொள்ளிடம் காவிரியில் இருந்துதான் தண்ணீர் வரவேண்டும். ஆனால், காவிரியில் இருந்து தண்ணீர் வந்தாலும், இப்போது நீர்த்தேக்கம் வறண்டே கிடக்கிறது.. எனவே தண்ணீரை தேடி வின்சென்ட் என்பவரது வீட்டுக்குள் புகுந்தது அந்த முதலை. கிட்டத்தட்ட 7 அடி நீளத்தில் இருந்த அந்த முதலையை பார்த்துமே கிராம மக்கள் அலறியடித்து ஓடிவிட்டார்கள்.. பிறகு வனத்துறையினர் அந்த முதலையை மீட்டனர்..

தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக முதலைகள் இடப்பெயர்ச்சியில் ஈடுபடுவது இன்றும் தொடர்வது அதிர்ச்சியை தந்து வருகிறது. அதிலும் தஞ்சை போன்ற செழிப்பு தேசத்திலேயே தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுவது கவலையை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+