கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்து.. சாலையில் சென்ற பெண் பரிதாப மரணம், தஞ்சை சோகம்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்ததால் சாலையில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பேனர் வைத்த ரவிச்சந்திரன் என்பவரை திருவோணம் போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் தந்தை முத்துவீரப்பன் மரணம் அடைந்தார்.
இதனால் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் ரவிச்சந்திரன் தனது தந்தையின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

8வது நாள் காரியம்
அந்த வழியாக வந்த புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார்.

108 ஆம்புலன்சு
அப்போது மேட்டுப்பட்டி வந்தபொழுது ரவிச்சந்திரன் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் விஜயராணி மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை, அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சு உதவியோடு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருவோணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கைது செய்தனர்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிளக்ஸ் பேனரை கைப்பற்றி பிளக்ஸ் பேனர் வைத்த ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த விஜயராணி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

பெண் உயிரிழப்பு
சென்னை உயர்நீதிமன்றம் சாலை ஓரங்களில் பொதுமக்களுக்கு இடர்பாடுகள் உள்ள இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டும் சரியான விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளாட்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை வருவாய்த் துறையின் அலட்சியப் போக்கே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சாலையில் சென்ற பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications