தஞ்சையில் அசத்தல்.. பைக்கில் ஹெல்மெட்டுடன் பெட்ரோல் பங்க் நுழைந்த ஜனம்.. ஒரே நாளில் ஈர்த்த தஞ்சாவூர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்த அறிவிப்பானது, ஒட்டுமொத்த மாவட்டத்தின் கவனத்தையும் ஒரே நாளில் ஈர்த்துவிட்டது. இந்த செய்திதான் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது.. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

petrol tamil thai vazhthu helmet

திராவிடம்: அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது. "திராவிடம்" என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்க்கப்பட்டது. குறிப்பிட்ட வரியை மட்டும் புறக்கணித்துவிட்டு, அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம் தற்போது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.

இந்நிலையில் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற நூதன அறிவிப்பு மாவட்ட மக்களை கவர்ந்திழுத்து வருகிறது..

ஹெல்மெட்:
ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் இந்த நூதன போட்டியை அறிவித்தது.. ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது. ஒரு பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் அணிந்து வரக்கூடிய நபர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையின்றி பாடினால் 2 லிட்டர் பெட்ரோலை, தொண்டு நிறுவனம் அறிவித்ததுமே, இந்த தகவல் தீயாய் பரவியது.. இதனால் ஏராளமான மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன், ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

அனைவருமே தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பிழையின்றி பாடி 2 லிட்டர் பெட்ரோலை தங்களது வண்டியில் நிரப்பி சென்றார்கள்.. ஒருசிலர் இந்த போட்டியில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடினார்கள்.. ஆனால், மறுபடியும் மனப்பாடம் செய்து, சரியாக பாடி பரிசு பெற்றனர். அந்தவகையில் மொத்தம் 25 நபர்கள் சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர்.

வாழ்த்து பாடல்: இந்த போட்டியின்போது தொண்டு நிறுவன நிர்வாகிகள் பிரபுராஜ்குமார், ஞானசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரபுராஜ்குமார் பேசும்போது, "இந்த போட்டி மூலம் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடுகின்றனரா என்பதை ஆராய்ந்தோம். சிலர் வாழ்த்து பாடலை தவறாக பாடினார்கள்.. ஆனால் பலர் சரியாக பாடிவிட்டார்கள். இதில் 25 நபர்கள் சரியாக பாடி இலவசமாக 2 லிட்டர் பெட்ரோலை பெற்றுள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+