தஞ்சாவூர் அம்மன் கோயிலில் அதிசயம்.. அந்த "தேங்காயை" பார்த்து அப்படியே உறைந்து ஜனம்! பரவசத்தில் தஞ்சை
தஞ்சாவூர்: தஞ்சையில் நடந்த கோயில் கும்பாபிஷேகம் வீடியோ ஒன்று, இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.
ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

அதன்படி, தீப்பாய்ந்த அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களாகிய பாலகணபதி, பாலமுருகன், வீரனாருக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த 12ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது..
யாகசாலை: இந்த விழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி மாலை அஷ்டதிக் அஸ்திர திசா ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி போன்றவையும் நடைபெற்றது.. இதையடுத்து, 10ம் தேதி காலை பிள்ளையார் பூஜையும், மாலை முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.
மறுநாள் 11ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக முடிந்தன.. அன்றைய தினம் மாலை 3ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, 12ம் தேதி கும்பாபிஷேம் கோலாகலமாக நடந்தது.. அதாவது, காலை 4ம் யாகசாலை பூஜைகள் நடந்து காலை 6 மணி முதல் 7. 30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததையடுத்து, மகா அபிஷேகம், அன்னதானம் போன்றவையும் நடந்தன. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்: இந்நிலையில், கும்பாபிஷேகம் முடிந்து 2 நாட்கள் ஆனபோதும், இந்த விழா பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், இந்த கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் தேங்காயை கொண்டு வந்திருந்தார்.
அந்த தேங்காயை உடைத்து கொண்டே வந்தார். அப்போதுதான், அந்த தேங்காயில் 4 சில் இருந்தது தெரியவந்தது.. வழக்கமாக ஒரு தேங்காய் உடைக்கும் போது அதில் 2 சில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தேங்காயில் 4 சில் இருந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
மெய்சிலிர்ப்பு: இந்த அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து நின்றனர்.. இந்த தேங்காய் இப்படி ஏன் இருக்கிறது என்று காரணம் தெரியவில்லை.. ஆனால், இந்த தேங்காய் வீடியோதான் இணையத்தில் பரபரப்பாக வெளியாகி, பக்தர்களுக்கு பரவசத்தை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications