டென்ஷனான தஞ்சாவூர் மேயர்.. பெண் உதவி பொறியாளரின் செல்போனை பறித்து பாக்கெட்டில் வைத்ததால் பரபரப்பு
தஞ்சாவூர்: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வின்போது தஞ்சாவூர் மேயர் ராமநாதன் உதவி பெண் பொறியாளரின் செல்போனை பிடுங்கி பாக்கெட்டில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் அவர் அப்படி செய்தார்?.
தஞ்சாவூர் மாநகராட்சி திமுக வசம் உள்ளது. இந்த மாநகராட்சியின் மேயராக ராமநாதன் செயல்பட்டு வருகிறார். இவர் திமுகவை சேர்ந்தவர். தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி அதிகமாக பாதிக்கப்பட்டன. தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்பட பல டெல்டா மாவட்டங்களும் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பை எதிர்கொண்டன. மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் தான் வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி தஞ்சாவூரில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழ்வான இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.
அந்த வகையில் இன்று தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை அவர் நேரடியாக கேட்டார். மேயர் ராமநாதனுடன் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர். 11வது வார்டில் பொதுமக்களிடம் மேயர் ராமநாதன் குறைகளை கேட்டார்.

அப்போது அவர் அருகே நின்று குறைகளை குறிப்பெடுத்து கொண்டி உதவி பெண் பொறியாளர் ஆனந்தி மாயமாகி இருந்தார். அவர் மேயர் ராமநாதனை விட சிறிது தூரம் தள்ளி நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை கவனித்த மேயர் ராமநாதன் அவரை பார்த்து, ‛‛இங்க வாங்கம்மா'' என அழைத்தார். செல்போனை காதில் வைத்தபோது ஆனந்தி வந்தார்.
இந்த வேளையில் திடீரென்று மேயர் ராமநாதன், ‛‛அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' எனக்கூறி செல்போனை வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டார். மேலும், ‛‛நாம் பொதுமக்களிடம் குறைகளை கேட்க தான் வந்து இருக்கிறோம். குறைகளை கேட்டு குறிப்பெடுங்கள். பிறகு செல்போனில் பேசிக்கொள்ளலாம்'' எனக்கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications