எல்லை மீறிய திமுக கவுன்சிலர்கள்! மாமன்றக் கூட்டத்தில் அநாகரீக வார்த்தைகள்! பொறுமையிழந்த தஞ்சை மேயர்!
தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏடாகூடமாக வார்த்தைகளை விட்ட திமுக கவுன்சிலர்கள் 2 பேரை சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகி விட வேண்டாம் என கடுமையான முறையில் எச்சரித்துள்ளார் மேயர் சண்.ராமநாதன்.
மாநகராட்சி வளாக கடைகளை வாடைக்கு விட்டது பற்றி திமுக கவுன்சிலர் நீலகண்டன் பேசிக் கொண்டிருந்த போதே, தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரின் கணவர் தானே நீங்கள் என மேயர் சண்.ராமநாதனை பார்த்து வார்த்தைகளை விட்டார். இதனால் டென்ஷனான மேயர் சண்.ராமநாதன் சபைக்கு தவறான தகவல்களை தராதீர்கள், சஸ்பெண்ட் நடவடிக்கை ஆளாகி விடாதீர்கள் என திமுக கவுன்சிலர் நீலகண்டனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

உடனே நீலகண்டனுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற பெயரில் எழுந்த ஆனந்த் என்ற திமுக கவுன்சிலரும், இந்த மிரட்டலுக்கு எல்லாம் தாங்கள் பயப்படப் போவதில்லை என சவுண்ட் விட்டார். அந்த நேரம் பார்த்து காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஹைஜா கனி என்பவர் ஏதோ பேசுவதற்கு எழுந்த போது, திமுக கவுன்சிலர்கள் நீலகண்டனும், ஆனந்தும் தங்கள் இருக்கையில் அமராமல் தொடர்ந்து பேச முயன்றனர். இதனால் டென்ஷனான காங்கிரஸ் கவுன்சிலர் ஹைஜா கனி, நீங்க மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் நான் எப்போது பேசுவது என திமுக கவுன்சிலர்கள் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் தஞ்சை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே திமுக கவுன்சிலர்கள் தன்னை பற்றி நக்கல் நையாண்டியாக பழைய ஆணையரின் கணவர் என சபையில் வைத்து விமர்சித்ததை தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவனத்திற்கு மேயர் சண்.ராமநாதன் கொண்டு சென்றிருக்கிறார். விரைவில் திமுகவிலிருந்து 2 கவுன்சிலர்களும் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே தஞ்சை மேயர் சண்.ராமநாதனுக்கு எதிராக கவுன்சிலர்கள் நீலகண்டனையும், ஆனந்தையும் பேச வைத்தது யார் என்ற விவரத்தை கட்சி மேலிடம் சத்தமின்றி சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications