Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆலமரத்தடியிலே.. கி.வீரமணியும், அண்ணாமலையும் ஒரே மாதிரி சொல்றாங்க? தஞ்சாவூர் கும்பகோணமே வியந்துருச்சு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பேச்சினை பாஜக தரப்பு உற்று கவனிக்க துவங்கி உள்ளது.

234 தொகுதிகளிலும் நடைபயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. நடைபயணத்தின் இறுதிநாளன்று திருப்பூரில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியிருந்த பல விஷயங்கள், மிகப்பெரிய கவனத்தை தமிழக மக்களிடம் ஈர்த்திருந்தது.

 Thanjavur Meeting and what did Veeramani say about Tamil Nadu BJP, PM Modi in Tanjore Kumbakonam

முக்கியமாக அண்ணாமலை பேசும்போது, "வரப்போகும் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். 400 எம்பிக்களையும் தாண்டி மோடி மீண்டும் பிரதமராக அமர்வார்.. அப்போது தமிழகத்தில் 39 எம்பிக்களையும் பாஜக பெறும்.

20 சதவிதம் ஓட்டு சதவீதத்தை, தமிழக பாஜக தாண்டி விட்டதாக பத்திரிகைகளில் கருத்து கணிப்புகள் வெளியாகின்றன. ஆனால், இது எங்களுக்கு போதாது.. இதனால் நாங்கள் சமாதானம் ஆகவில்லை. தனிப்பெரும் கட்சியாக தமிழக பாஜக மாறி கொண்டிருக்கிறது.

புத்துணர்ச்சி: ஆரம்பித்தது என்னவோ பாஜக யாத்திரையாக இருக்கலாம். ஆனால், முடிக்கும்போது இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது... புத்துணர்ச்சியாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை தரக்கூடிய யாத்திரையாக வீறுகொண்டு எழுந்துள்ளது.

மோடிஜியின் பயனாளிகள், மோடியின் நல்லாட்சியை விரும்புகிறவர்கள், 50 சதவீதமுள்ள நடுநிலை வாக்காளர்கள், இந்த தேர்தல் மோடிக்கான தேர்தல் என்று நடைபயணத்தில் கூறுகிறார்கள். உலகத்திலேயே இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற அடித்தளமிடப்போகிற தேர்தல் இது என்றும் பொதுமக்களே முடிவு செய்திருக்கிறார்கள்.
பாஜக: எங்கள் கட்சிக்கு ரொம்ப பெரிய புள்ளிகள் வரப்போகிறார்கள்.. சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அவர்கள் இருக்கலாம்.. "பாஜகவை நாங்கள் மதிப்பதே கிடையாது" என்று சொல்லி கொண்டிருந்தவர்களெல்லாம், இன்று எப்ப பார்த்தாலும் பாஜகவையே முணுமுணுத்து கொண்டிருக்கிறார்கள்.. தூங்கும்போதும் பாஜக.. தூங்கி எழுந்தாலும் பாஜக என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். இதுதான் எங்கள் வெற்றி என்று பேசியிருந்தார்.

அதற்கேற்றவேறு, பிரதமர் மோடியும், அன்றைய தினம் ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில், "நமது கட்சியின் கடின உழைப்பு களத்தில் தெரிகிறது. தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு பாஜகவை எதிர்பார்க்கிறது. பாஜகவால் மட்டுமே அவர்களின் கனவுகளை நனவாக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்" என்று அண்ணாமலையை டேக் செய்து, பிரதமர் மோடி தமிழில் இந்த ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.

மொத்தத்தில், அண்ணாமலையின் நடைபயணம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்திருப்பதாக தமிழக பாஜகவினர் களிப்பிலும், பூரிப்பிலும் உள்ளனர்.

பூரிக்கும் பாஜக: ஆனால், எதிர்க்கட்சிகளோ இந்த நடைபயணத்தை விமர்சித்து வருகின்றன.. அதைவிட முக்கியமாக, பிரதமர் மோடியின் எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ்ச்சி பேச்சினை, அதிமுக உட்பட திராவிட கட்சிகளும் விமர்சித்தே வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தின் மூத்த தலைவரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணியும் விமர்சித்திருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், 100 சதவீதம் தோல்வி அடைந்து விடுவோம் என்பதை உணர்ந்து விட்டார். அதன் அறிகுறிதான் அவரின் குழம்பிய பேச்சு.

பிரதமர் மோடி: தமிழகத்தில் மோடி எது சொன்னாலும் எடுபடாது. இப்போது மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்ந்து பேசி வருகிறார். மோடியால் எந்த பக்கமும் செல்ல முடியவில்லை. மோடி அரசின் ஏமாற்று வேலையை அனைவரும் உணர்ந்துள்ளனர். எனவே மோடி மறுபடியும் பிரதமராக வாய்ப்பில்லை.

பாதயாத்திரை பற்றி கேட்கிறீர்கள்.. யாத்திரை - பாதி யாத்திரை - மீதி யாத்திரை - இதிலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை.. தமிழகத்தில் பாஜக நடத்தியது பாதயாத்திரை கிடையாது, அது தன்னுடைய இறுதி யாத்திரையை நடத்தியிருக்கிறது. இங்கே ஆட்சி அமைக்கப்போவது, இந்தியா கூட்டணிதான் என்றார்.

ஆலமரத்தடி: உடனே செய்தியாளர்கள், "இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை பிடிக்கும்" என்று கேட்டனர். அதற்கு வீரமணி, "நாங்கள் என்ன ஆலமரத்தடி ஜோசியரா? ஜோசியத்தில் நம்பிக்கையில்லை.. ஆரூடம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் ஆதரவு மட்டுமே இதற்கு பதில் சொல்லும். 40-க்கும் மேல் இங்கே உறுதி.. 400 இடங்களுக்கும் மேல் இடங்களை பெற்று, இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்" என்றார்.

400-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக பிடிக்கும் என்று தலைவர் அண்ணாமலையும் சொல்கிறார்.. 400-க்கும் மேற்பட்ட இடங்களை இந்தியா கூட்டணி பிடிக்கும் என்று ஐயா வீரமணியும் சொல்கிறார்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+