அதிர்ச்சி அலைகள்.. தஞ்சையில் கேட்ட பயங்கர சத்தம்.. பின்னணியில் சோனிக் பூம்.. பரபரப்பு தகவல்கள்!
தஞ்சாவூர்: நேற்று தஞ்சாவூரில் பயங்கரமான சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் திடீர் என்று மதிய நேரத்தில் மிகப்பெரிய சத்தம் கேட்டது. பெரிய அளவில் வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது. பெங்களூர் முழுக்க பல்வேறு பகுதிகளில் சத்தம் கேட்டது.
இதனால் பெங்களூரில் எங்காவது வெடிகுண்டுகள் வெடித்துவிட்டதா என்று மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக இணையம் முழுக்க நிறைய விவாதங்கள் நடந்தது. பெங்களூருக்கு ஏலியன் வந்துவிட்டதா என்றும் கூட விவாதம் செய்தனர்.

உண்மை என்ன
இந்த நிலையில் பெங்களூரில் இப்படி மிக அதிகமாக பயங்கர சத்தம் கேட்க காரணம் சோனிக் பூம் என்று இந்திய விமானப்படை விளக்கம் அளித்தது. பொதுவாக விமானப்படை விமானங்கள் சப் சோனிக், சோனிக், சூப்பர் சோனிக், ஹைப்பர் சோனிக் என்று பல விதமான வேகங்களில் பரவும் திறன் கொண்டது. இதில் விமானம் சோனிக் வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் பறந்தால் பயங்கர சத்தம் கேட்கும்.

அதிர்ச்சி அலைகள் வரும்
விமானம் அல்லது ராக்கெட் காற்றை கிழித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் அதிர்ச்சி அலைகள் ஒன்றாக சேர்ந்து இப்படி சத்தம் கேட்கும். இதைத்தான் சோனிக் பூம் என்று கூறுவார்கள். பெங்களூரில் இப்படித்தான் அன்று சோனிக் பூம் கேட்டு இருக்கிறது. விமானப்படை புதிய வகை சோனிக் ரக விமானம் ஒன்றை வைத்து பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்த பயங்கர சத்தம் கேட்டு இருக்கிறது.

தஞ்சாவூர்
இந்த நிலையில் தஞ்சாவூரில் இதேபோல் சோனிக் பூம் சத்தம் கேட்டு இருக்கிறது. நேற்று தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுக்கூர், நாகப்பட்டினத்தில் சில பகுதிகளில் இந்த சத்தம் கேட்டு இருக்கிறது. பயங்கரமாக வெடி வெடிப்பது போல சத்தம் கேட்டது. இதனால் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதற்கும் சோனிக் பூம்தான் காரணம் என்கிறார்கள்.

விமானப்படை
தஞ்சையில் விமானப்படை சமீப நாட்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் விமானப்படை தளத்திற்கு புதிய வகை விமானங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு சோனிக் ரக விமானங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு இப்படி சத்தம் கேட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக விமானப்படை இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

தயார் நிலை
கடந்த ஒரு மாதமாகவே நாடு முழுக்க விமானப்படை தீவிர பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. தங்களின் விமானங்களை நாட்டுக்கு உள்ளேயே பறக்க வைத்து தீவிரமாகபயிற்சிகளை செய்து வருகிறது. இதனால் நாடு முழுக்க பல இடங்களில் அடிக்கடி சோனிக் பூம் சத்தங்கள் கேட்டு வருகிறது. பெங்களூரில் அடிக்கடி இந்த சத்தம் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications