தஞ்சாவூர் டூர் போறீங்களா நீங்க.. வழக்கமான இடங்களை விடுங்க.. இதை முதல்ல போய் பாருங்க.. கொள்ளை அழகு
தஞ்சாவூர்: கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற இடம் என்பதாலும், சென்னையிலிருந்து சில நூறு கி.மீ தொலைவில் இருக்கிறது என்பதாலும் அதிக அளவில் மக்களை இந்த மாவட்டம் ஈர்க்கிறது. ஆனால் பலரும் வழக்கமான இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்பிவிடுகின்றனர். இம்மாவட்டத்தில் ஏராளமான இடங்கள் அற்புதமான சுற்றுலா அனுபவத்தை கொடுக்கும் என்பதால் அடுத்த முறை போகும்போது சில முக்கியமான இடங்களுக்கு வண்டியை விடுங்கள்.
தமிழ்நாட்டில் இன்னும் நான்கு நாட்களுக்கு வெயில் வாட்டி எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதேபோல கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கு ஏற்கனவே மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகிறார்கள். எனவே கூட்டம் அதிகம் இல்லாத இடங்களுக்கு போக வேண்டும், அதே நேரம் சென்னையிலிருந்து சில நூறு கி.மீ மட்டுமே டராவல் இருக்குற ஊருக்கு போகனுமா? அதுக்கு தஞ்சாவூர் பெஸ்ட் சாய்ஸ்.

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஊர்களில் தஞ்சாவூர் மிக முக்கியமானதாகும். தஞ்சை என்றாலே உடனடியான நினைவுக்கு வருவது பெரிய கோயிலும், சரஸ்வதி மஹாலும்தான். ஆனால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம், ஆலங்குடி குரு ஸ்தலம், சுவாமி நாத மலை முருகன் கோயில், பூண்டி மாதா பேராலயம், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் மாளிகை, சிவகங்கை பூங்கா, விஜயநகர கோட்டை போன்றவை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்: தஞ்சாவூரிலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது. 17.26 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பகுதியில் ஏராளமான காட்டுயிர்கள் இருக்கின்றன. காட்டுயிர்களை போட்டோ எடுப்பதில் ஆர்வமிக்கவர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்க பூமி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உயிரினங்களை இங்கு அசால்ட்டாக பார்க்க முடியும். மான்கள், காட்டு குதிரைகள், நரி, காட்டுப்பன்றி, முயல், ஆமை என பல்வேறு விலங்குகளும்,
பூநாரை போன்ற வித்தியாசமான பறவைகளும் இங்கு காணப்படுகிறது. சில பறவைகள் அண்டார்டிகாவிலிருந்து அதாவது 12 ஆயிரம் கி.மீ தொலைவிலிருந்து கூட இங்கு வலசைக்கு வருகின்றன. நவம்பர் முதல் மே மாதம் வரை இங்கு சீசன் என்பதால் இந்த சம்மருக்கு இந்த பகுதிக்கு செல்வது ரம்மியமான அனுபவத்தை கொடுக்கும். இதை முடித்துவிட்டு அப்படியே வண்டியை யூடர்ன் அடித்துக்கொண்டு நகருக்குள் வந்தால் ஆலங்குடி குரு ஸ்தலம் கோயில் உங்களை அன்புடன் வரவேற்கும்.
கும்பகோணம் வட்டம் பகுதியில் ஆலங்குடி கிராமத்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. இது அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் மூலவராக ஆபத்சகாயேஸ்வரர் இருக்கிறார். இது தவிர காசி ஆரண்யேஸ்வரரும் மூலவராக வழிப்படப்படுகிறார். இந்த கோயிலில் சுந்தரர் சிலை ஒன்று இருக்கிறது. முன்னொரு காலத்தில் அர்ச்சகர் ஒருவர் இந்த சிலையை மறைத்து கோயிலுக்கு எடுத்து வந்துள்ளார்.
வழியில் காவலர்கள் மறிக்கவே தன்னுடைய பிள்ளைக்கு அம்மை போட்டுவிட்டது என்று கூறி தப்பி வந்து சிலையை கோயிலில் வைத்திருக்கிறார். ஆனால் இவர் மறைத்து கொண்டு வந்த சுந்தரர் சிலைக்கு நிஜமாகவே அம்மை போட்டிருந்ததாம். கோயிலில் தட்சணாமூர்த்தி சன்னதி அருகே இருக்கும் இந்த சிலையில் இப்போது கூட அம்மை போட்டதற்கான தழும்புகள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அமைதியும், மன நிம்மதியும் தரும் இந்த கோயில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.
அதேபோல சுவாமி நாத மலை முருகன் கோயிலும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக உள்ள இந்த கோயில் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் காவிரி கரையில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் வைகாசி விசாகம் மற்றும் கார்த்திகை ஆகியவை திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலை போலவே புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசத்தி பெற்றதாகும்.
சோழர் காலத்தில் சிறிய கோயிலாக கட்டப்பட்ட இது பின்னாட்களில் வந்த வெவ்வேறு அரசர்களால் பெரியதாக கட்டப்பட்டு 1950ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த கோயிலை கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில் இந்து கோயில்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களும் இருக்கின்றன. அதில் முக்கியமானது பூண்டி மாதா பேராலயம்.
சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவரின் முயற்சியால் கட்டப்பட்டதாகும். பின்னாட்களில் வந்தவர்கள் இந்த தேவாலயத்தை புனரமைத்தனர். ஒரு காலத்தில் தமிழ் எழுத்துக்கள் நீண்டு இருந்தன. 'ஆ' எனும் நெடில் எழுத்தை எழுத 'அர' என இரண்டு வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனை அர-ஆ என மாற்றியவர் வீரமாமுனிவர்தான். தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்தவர் கட்டிய கோயில்தான் இந்த பூண்டி மாதா பேராலயம்.
அதேபோல சுமார் 400 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் அரண்மனையும், சுற்றிபார்க்க ஏற்ற இடமாகும். இந்த அரண்மனை விஜயநகர கோட்டையின் ஒரு பகுதியில்தான் அமைந்திருக்கிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டை ஏறத்தாழ முற்றிலுமாக இடிந்துவிட்டது. எப்படியாயினும் இந்த சம்மரை பயனுள்ளதாக கழிக்க தஞ்சை சிறப்பான இடமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications