சசிகலா உரிய நேரத்தில் வருவார்... பரபரப்ப கிளப்பாதீங்க... எகிறிய டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சசிகலா சிறையிலிருந்து உரிய நேரத்தில் வருவார்- டிடிவி தினகரன் பேட்டி

    தஞ்சை: சசிகலா சிறையிலிருந்து உரிய நேரத்தில் வருவார் என்றும், அதற்குள் அது குறித்து யூகத்தின் அடிப்படையில் கருத்துக்கூற விரும்பவில்லை எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    தஞ்சையில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில் பெரிய ஆச்சரியம் எல்லாம் ஒன்றுமில்லை என்றும் கூறினார்.

    யூகம் வேண்டாம்

    யூகம் வேண்டாம்

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா உரிய நேரத்தில் வெளியே வருவார் என்றும், அதற்குள் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் கூறினார். தீபாவளிக்கு வருவார், அதற்கு வருவார், இதற்கு வருவார் என்றெல்லாம் ஊடகங்கள் தாங்களே யூகித்து செய்தி வெளியிடுவதற்கு எல்லாம் தம்மால் பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

    திட்டவட்டம்

    திட்டவட்டம்

    அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், துரோகிகளுடன் மீண்டும் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை தாம் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும், இது தொடர்பாக பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என கடுகடுத்தார்.

    கருத்து

    கருத்து

    நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பெற்றுள்ள வெற்றி பணபலத்தால் கிடைத்தது எனவும், ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

    சாடல்

    சாடல்

    அதிகார துஷ்பிரயோகம் மூலமும், பணத்தை வாரி இறைத்தும் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது, ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு இருப்பதால், அதற்குள் தங்களுக்கு நல்லது செய்வார்கள் என நம்பி இரண்டு தொகுதி மக்களும் வாக்களித்திருக்கக் கூடும் எனத் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+