தஞ்சையில் மகள் திருமணத்துக்காக கணவருடன் பைக்கில் சென்ற பெண்.. இப்படியா ஆகணும்.. கடைசியில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெட்டிக்காடு அய்யனார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி மற்றும் மாலதி தம்பதிக்கு சுகிர்தா என்ற மகள் உள்ளார். இவருக்கு நேற்று காலை ஊரணிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. முன்னதாக மகளின் திருமணத்துக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லட்சுமிக்கு எதிர்பாராத சம்பவம் நடந்தது. இதனால் தாய் இல்லாமல் மகளுக்கு உறவினர்கள் அவரது திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மகள் அல்லது மகனின் திருமண நாளில் ஒரு தாய் அல்லது தந்தை இல்லாமல் போவது என்பது அந்த குடும்பத்திற்கும் சரி, திருமண வீட்டாருக்கும் சரி மிகப்பெரிய இழப்பு மற்றும் சோகமான நிகழ்வாகும். அந்த சோகத்திலும் ஆசை ஆசையாய் மகளுக்கு திருமணத்தை நடத்தி பார்க்க ஆசைப்பட்ட தாயின் கனவை உறவினர்கள் நிறைவேற்றுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தஞ்சை அருகே நடந்துள்ளது.

What happened to the mother on the day of her daughter s wedding near Thanjavur

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெட்டிக்காடு அய்யனார்புரம் கிராமத்தை சேர்ந்த 55 வயதாகும் ரெங்கசாமி கூலித்தொழிலாளியாவார். இவருடைய மனைவி மாலதி(50). இவரும் கூலி தொழிலாளியாவார். இவர்களுடைய மகள் சுகிர்தாவுக்கு பெண் தேடி வந்தனர். இதன்படி சதீஷ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

மகளின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்த ரெங்கசாமி மற்றும் அவருடைய மனைவி மாலதி ஆகியோர் நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு திருமண மண்டபத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ரெங்கசாமி ஓட்டிச் சென்றார். மாலதி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

திருவோணம் அருகே கலியராயன் விடுதி சாலையில் நரியாற்று பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த மாலதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ரெங்கசாமி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ரெங்கசாமி படுகாயம் அடைந்ததும், மாலதி இறந்ததும் உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மணமகளிடம் அவருடைய தாய் விபத்தில் இறந்ததை தெரிவிக்காமல் திருமணத்தை நடத்தி வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி சுகிர்தாவுக்கும், சதீஷ்குமாருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

அதன் பின்னர் உறவினர்கள் மணமகள் சுகிர்தாவிடம் விபத்தில் தாய் இறந்ததையும், தந்தை படுகாயம் அடைந்ததையும் கூறினர். அதை கேட்ட அவர் கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். இந்த விபத்து குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+