தஞ்சையில் பேருந்தை தவறவிட்ட ஷாலினி.. பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற போது.. காத்திருந்த எமன்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூர் ஊராட்சி மண்ணிக்கரையூர் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவரது இரண்டாவது மகள் ஷாலினி, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஷாலினி பேருந்தை தவறவிட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்றுள்ளார். ஆனால் எதிரே வந்த பள்ளி வாகனம் இவருக்கு எமனாக மாறி உள்ளது.
சிலர் வாழ்க்கையில் நினைத்தே பார்க்காத தவறுகள் நடக்கும்.. நன்றாக சென்று கொண்டிருப்பார்கள். திடீரென பின்னால் வந்தவரின் தவறால் உயிரிழப்பார்கள். சிலரது மது போதை மயக்கம், சாலையில் செல்லும் பலரை காலி செய்துள்ளது. சிலர் அதிகாலையில் ஒரு சில வினாடிகள் தூங்கி வழிவது, அந்த காரில் செல்லும் அத்தனை பேருக்கும் சிக்கலாகிறது. டிரைவர்களின் தவறுகளை தாண்டி, சாலையில் செல்லும் போது, வாகனங்கள் கட்டுப்பாட்டை இழப்பதும் பல விபத்துகளுக்கு காரணமாகிறது. அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகளின் அலட்சியமும் விபத்திற்கு காரணங்களாக உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூர் ஊராட்சி மண்ணிக்கரையூர் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவரது இரண்டாவது மகள் ஷாலினி, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ஷாலினி திருபுறம்பியம் செல்வதற்காக அரசு பேருந்துக்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். பேருந்தை தவறவிட்ட ஷாலினி அதே சாலையில் புதுக்கண்டி படுகை கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் விஜய் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
அப்பொழுது திருப்புறம்பியத்திலிருந்து திருவைகாவூர் நோக்கி வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தலைகுப்புற கீழே விழுந்த ஷாலினி தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார் பின்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications