’அந்த’ கோலத்தில் பார்த்த கணவன்..காலை பிடித்து கதை முடித்த நாகலட்சுமி! ஓவர் ஆக்டிங் பரிதாபங்கள்!
தஞ்சாவூர்: தஞ்சை அருகே குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட நபர் கொலை செய்யபட்டது தெரியவந்துள்ளது. கள்ளக்காதனுடன் இருந்ததை கணவன் பார்த்து விட்டதால் அவரை கொலை செய்த மனைவி போட்ட நாடகத்தை நம்பி உறவினர்கள் உடலை எரித்து விட்டனர். இந்த நிலையில் மனைவியே கொலை செய்தது தெரிய வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 13.03.25 ந்தேதி வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் குடும்ப பிரச்சினையால் தூக்கு போட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்காமல் அடுத்த நாள் அவரது உடலை மனைவி நாகலட்சுமி வற்புறுத்தலின் பேரில் உறவினர்கள் கூடி எரித்துள்ளனர். இந்த நிலையில் தனது சகோதரன் பிரகாஷின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக அவரது பெரியப்பா மகனான சுரேஷ் என்பவர் வாய்மொழியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிரகாஷின் மனைவியான நாகலட்சுமி அழுது புரண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் நாகலட்சுமியின் ஓவர் ஆக்டிங்கால் சந்தேகம் அடைந்த போலீசார் நாகலட்சுமி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரகாஷின் மனைவி நாகலட்சுமிக்கு அதே தெருவை சேர்ந்த வீரக் குமார் என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது தெரிய வந்துள்ளது. இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்த பிரகாஷ் ஆத்திரத்தில் கண்டித்ததால் அவரது மனைவி நாகலட்சுமி வீரகுமார் சேர்ந்து பிரகாஷை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து கழுத்தில் கயிறால் கட்டி உடலை தூக்கில் தொங்க விட்டு, கடன் பிரச்சினையால் தற்கொலை செய்தது போல நம்ப வைத்து ஊரை ஏமாற்றி இருக்கின்றனர்.
யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என அடுத்த நாளே அவரது உடலை உறவினர்கள் மூலம் எரித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தது. இதற்கிடையே பிரகாஷ் நாமக்கல்லில் வேலை செய்து வருவது தெரிந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல பகீர் தரும் தகவல்கள் தெரியவந்தது.
பிரகாஷ் கொலை செய்யப்பட்ட நாள் அன்று நாகலட்சுமி தனது கள்ளக் காதலன் வீரக்குமாருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த பிரகாஷ் இருவரையும் பார்த்ததோடு, இருவரையும் தாக்கிள்ளார். இதனால் பயந்து போன நாகலட்சுமி பிரகாஷின் காலை பிடித்து கீழே தள்ளியுள்ளார். தொடர்ந்து வீரக்குமார் பிரகாஷின் கழுத்த நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். பிறகு அவரது உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.
கொலை நடந்து ஒரு வார காலம் ஆன நிலையில் மீண்டும் வீரக்குமாரும் நாகலட்சுமி பேசியுள்ளனர். இதை அடுத்து சந்தேகம் அடைந்த பிரகாஷின் சகோதரர் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications