வீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்
4 வயது குழந்தையை கடத்தி சென்று கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்
Recommended Video
தேனி: ராத்திரியில் ஜாலியாக இருக்க முடியவில்லையே என்பதற்காக 4 வயது குழந்தையை கல்லாலேயே அடித்து கொன்ற கொடூரம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. இது சம்பந்தமாக பெற்ற தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கோம்பை மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கீதா. கீதாவுக்கு 23 வயசாகிறது. இவர்களது 4 வயது மகன் ஹரிஷ்.
ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக 2 வருஷத்துக்கு முன்னாடியே தம்பதி பிரிந்துவிட்டனர். பின்னர் முருகன் வேறொரு கல்யாணம் செய்து கொண்டார். கீதாவும் உதயகுமார் என்பவரை 2-வதாக கல்யாணம் செய்து கொண்டார். ஒரு வயதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

எரிச்சல்
இதனால் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையான ஹரீஷை தனது பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் கீதா தனது கணவர் உதயகுமாருடன் அம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே குடியேறினார். இதனால் ஹரீஷ் அடிக்கடி அம்மா கீதாவிடம் வர ஆரம்பித்துள்ளான். ராத்திரி நேரத்திலும் வந்து தூங்க ஆரம்பித்துள்ளதால், கீதாவுக்கும், உதயகுமாருக்கும் எரிச்சல் வந்திருக்கிறது.

உல்லாசம்
இதனிடையே கீதாவின் தங்கை புவனேஸ்வரியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால், கார்த்திக் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல புவனேஸ்வரியும், உதயகுமாரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனை ஹரிஷ் பார்த்து விட்டான். இவர்கள் அனைவரின் உல்லாசத்துக்கும் ஹரீஷ் இடைஞ்சலாக இருப்பதாக எண்ணினார்கள். அதனால் அவனுக்கு சரியாக சாப்பாடு தராமல் இருந்திருக்கிறார்கள்.

கொல்ல முடிவு
ராத்திரி நேரம் என்றும் பார்க்காமல், ஹரீஷை வெளியில் அனுப்பி கதவை அடைத்து விடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனராம். ஒரே ஒரு அறையை மட்டுமே கொண்ட கீதாவின் வீட்டில், ஹரீஷ் இருக்கும்வரை உல்லாசமாக இருக்க முடியாது என்று உதயகுமாரும் கீதாவும் முடிவு செய்தனர். இந்நிலையில்,நேற்றுமுன்தினம் கீதாவின் சகோதரியான புவனேஸ்வரி மற்றும் அவரது கணவர் கார்த்திக்குமார் ஆகியோர் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர்.

கொலை
இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என்று தெரிகிறது. கார்த்திக் குமார் மற்றும் புவனேஸ்வரியிடம் ஹரீஷ் தங்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கிறான் என்று உதயகுமாரும் கீதாவும் தெரிவித்தனர். அந்த சமயத்தில்தான் இதனையடுத்து ஹரீஷை கொலை செய்து செய்வது என்று 4 பேரும் முடிவு செய்தனர்.

முகத்தை சிதைத்தனர்
அதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து ஹரீஷை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு கோம்பை கால்நடை ஆஸ்பத்திரிக்கு எதிராக உள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதிக்கு சென்றவுடன் கார்த்திக்குமார் கம்பியால் ஹரீஷின் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. அதன் பின்னர் புவனேஸ்வரி அந்த சிறுவனின் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளார். கீதாவின் இரண்டாவது கணவர் உதயகுமார் அங்கிருந்த செங்கலால் சிறுவனின் முகத்தை அடித்து சிதைத்துள்ளார்.

கழுத்தை அறுத்தனர்
"என் கண்முன்னே என் மகனை கழுத்தை அறுக்காதீர்கள், நான் கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறேன்" என்று சொல்லி கீதா ஆள் நடமாட்டம் எதுவும் உள்ளதா என்று கண்காணித்து கொண்டிருந்திருக்கிறார். கொலை செய்து முடித்ததும் புவனேஸ்வரியும் கார்த்திக்கும் தங்களது ஆட்டோவில் கம்பத்திற்கு சென்றுவிட்டனர் உதயகுமாரும் கீதாவும் ஒன்றும் தெரியாதது போல் அவர்களது வீட்டிற்கு வந்துவிட்டனர்.

போலீசில் புகார்
ராத்திரி 9 மணிக்கு மேல்தான் குழந்தையை காணோம் என்று கீதாவின் பெற்றோர், தங்கை தேடி உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து கீதாவும் மகனை தேடி உள்ளார். போலீசில் மகனை காணோம் என்று புகார் அளித்ததே கீதாதான். மறுநாள் காலை அந்த பகுதிக்கு சென்றவர்கள் ஹரீஷ் இறந்து கிடந்ததை பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

4 பேர் கைது
உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு எதுவுமே உடனே பிடிபடவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோதுதான், சிறுவனை இவர்கள் அழைத்து கொண்டு ஆட்டோவில் சென்றதை கண்டு அதிர்ந்து போனார்கள். இதையடுத்து 4 பேரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய பிறகு, குழந்தையை அடித்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications