ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது!?
தேனி அருகே அதிமுக பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
தேனி: தோட்டத்தில் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடிவந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்து உள்ள டி.வி.ரங்கநாதபுரம். இங்குள்ள விவசாய தோட்டத்தில் இன்று காலை, எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

விரைந்து வந்த போலீசாரும் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், எரித்துக் கொலை செய்யப்பட்ட நபர் அதிமுக பிரமுகர் என்பதும், அவரது பெயர் சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும் சதீஷை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
சதீஷின் அப்பா பாண்டியராஜன், தாயார் பேச்சியம்மாள் இருவரும் இன்று விடிகாலை தோட்டத்திற்கு தண்ணி கட்டுவதற்காக சென்றபோதுதான், மகன் எரிக்கப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அலறி உள்ளார்கள். நேற்று இரவு, சதீஷ் "மதுரையில் இருக்கிறேன்" என்று தனது தாய் பேச்சியம்மாளிடம் தெரிவித்திருக்கிறார்.
அதனால் தேனிக்கு சதீஷ் எப்படி, எப்போது வந்தார், எதனால் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இன்னும் போலீசாரால் ஒரு முடிவுக்கு வரஇயலவில்லை. சதீஷுக்கு கட்சி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பிரச்சினை உள்ளதா என்று பல கோணங்களில் ஆண்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், பாதி எரிந்த நிலையில் தோட்டத்தில் பிணம் கிடந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications