Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி மேகமலைக்கு நள்ளிரவில் வந்த கார்.. சோதனை சாவடியில் அலறிய வனத்துறை ஊழியர்.. சிக்கிய கும்பல்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான மேகமலைக்கு இரவில் செல்ல அனுமதி எப்போதுமே கிடையாது. இந்நிலையில் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவில் காரில் வந்த 6 பேர், தங்களை அனுமதிக்க மறுத்த வனத்துறை ஊழியரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேகமலை உலக அளவில் சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இது, சின்னமனூரில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மேகமலை சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம் ஆகும். எந்த ஒரு பெரிய மாற்றங்களும் இல்லாத மேகங்கள் தவழ்ந்து செல்லும் இந்த மேகலைக்கு வழி கேட்டால் கூகுளுக்கே இன்று வரை தெரியாது. இதற்கு ஹைவேவிஸ் டேம் என்று போட்டால் தான் கூகுள் வழி கூட காட்டும். மிகமிக அமைதியான இயற்கை காடுகளையும் அணைகளையும் கொண்ட மேகமலை தனியார் வசம் உள்ள பகுதி என்றாலும், இங்கு சுற்றுலா செல்வதற்கு எந்த தடையும் இல்லை.. இந்த மலையில் வாகனத்தில் பயணிப்பது பலருக்கும் பிடிக்கும்.

Theni Meghamalai tour

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வாகனங்களில் பயணித்தப்படியே எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை ரசிக்க ஏராளமானோர் வருகிறார்கள். மேகமலையில் தங்கி சுற்றி பார்க்க பெரிய அளவில் சுற்றுலாவிடுதிகள் இல்லை.. ஏன் ஓட்டல்கள் கூட அங்கு பெரிதாக இல்லை. ஒன்றிரண்டு ஓட்டல்கள் தான் உள்ளன. மேகமலையை பொறுத்தவரை ஹைவேவிஸ், மகராஜமெட்டு, இரவங்கலாறு, தூவானம் ஆகிய இடங்களில் அணைகள் உள்ளன.

இந்த அணைகளும், இந்த அணைகளை ஒட்டிய சாலையும், தேயிலை தோட்டங்களும், அடிக்கடி வந்து போகும் மேகக்கூட்டங்களும், மழையும் நிச்சயம் புல்லரிக்க வைக்கும்.மிகமிக அமைதியான இந்த சுற்றுலா தலம் பசுமை நிறைந்து காண்போரின் விழிகளுக்கு விருந்து படைக்கிறது. மேகமலை வனப்பகுதியை பொறுத்தவரை யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இங்கு சர்வ சாதாரணமாக யானைகள், கறுஞ்சிறுத்தை, புலி போன்றவற்றை பார்க்க முடியும்.

மேகமலையை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் குகு குளு சீதோஷ்ண நிலவுவது வழக்கம். இதனை அனுபவிக்க தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மேகமலைக்கு வருகை தருவார்கள். வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுமே பலர் மேகமலைக்கு வந்து செல்கிறார்கள்.

ஆனால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். ஏனெனில், இரவு நேரத்தில் மலைப்பாதையில் செல்லும்போது வனவிலங்குகள்-மனித மோதல் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். எனவேதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேகமலைக்கு செல்லும் நுழைவுபகுதியான, தென்பழனி என்னுமிடத்தில் சோதனைச்சாவடி வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இங்கு வனத்துறையினரின் அனுமதி பெறவேண்டும். அனுமதி இல்லாமல் போக முடியாது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், தென்பழனி சோதனைச்சாவடிக்கு ஒரு காரில் 6 பேர் வந்துள்ளார்கள். அவர்கள் மேகமலைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.அப்போது அங்கு பணியில் இருந்த வனக்காப்பாளர் காசி (வயது 52), வேட்டைத்தடுப்பு காவலர் சரண் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளார்கள் ஆனால் அவர்கள் தங்களை மேகமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி காசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர்கள், காசியை அங்கு கிடந்த கம்பால் சரமாரியாக தாக்கினார்களாம். தாக்குதலில் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த சரண் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

பின்னர் அவர், இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் வனத்துறை அலுவலகத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர், ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மற்ற 4 பேரையும் போலீசாரும், வனத்துறையினரும் மடக்கி பிடித்தனர். மேலும் படுகாயம் அடைந்த வனக்காப்பாளர் காசியை மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர்கள் செல்வம் (38), சிவா (40), சதீஷ்குமார் (37), பாலார்பட்டியை சேர்ந்த மலைச்சாமி (42) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேகமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+