தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேய் நாங்க வர கூடாதா? பாஜகவை திணறடித்த 2 பெண்கள்.. "ம்மா போயிடும்மா".. கோபத்தில் சீறிய "காவிகள்"

Google Oneindia Tamil News

தேனி:தேனியில் மத்திய அரசுக்கு எதிராக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக ஆர்வலரான நந்தினி மது ஒழிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார். மது ஒழிப்பு மட்டுமின்றி சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராகவும் இவர் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் இன்று தேனியிலும் பழைய பேருந்து நிலையில் சமூக ஆர்வலரான நந்தினி தனது தங்கை நிரஞ்சனாவுடன் சேர்ந்து போராட்டம் செய்தார்.

நீ எனக்காக பிறந்தவள்.. போலீஸ்காரரின் மகளை மிரட்டி 3 வருடம் பலாத்காரம் செய்த போலி சாமியார்.. ஷாக் நீ எனக்காக பிறந்தவள்.. போலீஸ்காரரின் மகளை மிரட்டி 3 வருடம் பலாத்காரம் செய்த போலி சாமியார்.. ஷாக்

பாஜக

பாஜக

மத்திய பாஜக அரசுக்கு எதிராக துண்டு சீட்டு கொடுத்து இவர் போராட்டம் செய்தார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி மத்திய அரசு மக்களை ஏமாற்றிவிட்டது. இளைஞர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள். பெட்ரோல் , டீசல் விலையை குறைக்கவில்லை. தொடர்ந்து ஏற்றி வருகிறார்கள். பெரும் முதலாளிகளுக்கு 10.72 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளனர். மக்கள் மீது ஜிஎஸ்டி வரி சுமையை ஏற்றி உள்ளனர் என்று கூறி கோஷம் செய்தனர்.

கோஷம்

கோஷம்

இவர்கள் இருவரும் துண்டு சீட்டு கொடுத்தபடி கோஷம் எழுப்பியதை பார்த்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். நீங்க இரண்டு பேரும் போங்க. இங்க நிற்காதீங்க. மக்களுக்கு தொந்தரவு செய்யாதீங்க என்று போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசார் சொன்னதை கேட்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். நாங்கள் போராட்டம் செய்யவில்லையே, துண்டு சீட்டு தானே கொடுக்கிறோம் என்று பதிலுக்கு கூறினார்கள்.

பாஜக

பாஜக

ஆனால் இதை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண் போலீசார் சிலர் வந்து அந்த பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பார்த்தனர். அப்போது தகவல் அறிந்து அங்கு பாஜகவினர் குவிந்தனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய இரண்டு பெண்களையும் பார்த்து பாஜகவினர் எதிர் கோஷம் எழுப்பினர். காவி கொடிகளுடன் வந்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர்.

 மோதல்

மோதல்

அப்போது அந்த பெண்களை பார்த்து ஏ நீ ஏன் இப்போ மதுவிற்கு எதிராக போராடுவது இல்லை.. இப்போ மட்டும் ஏன் பாஜகவை எதிர்க்கிற என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அந்த பெண்கள்.. நாங்கள் அனைத்தையும்தான் எதிர்க்கிறோம். வேலை வாய்ப்பு மாணவர்கள் பிரச்சனை அதை பற்றி பேசுகிறோம் என்று கூறினர். ஆனால் பாஜகவினர் அதை கேட்காமல் ஏ இங்க இருந்த போம்மா.. மக்களை தொல்லை செய்யாதே என்று கூறி கோஷம் எழுப்பினர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதற்கு அந்த பெண்கள் பதிலுக்கு ஏன்.. நாங்க இங்க வர கூடாதா? என்ன சட்டம் இருக்கு? என்று கேட்டனர். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நந்தினி மற்றும் நிரஞ்சனாவை கைது செய்து தேனி போலீசார் காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றனர்.

English summary
BJP stops Nandhini and Her sister protest in Theni half way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X