தேனி தர்காவில்.. பிரபலம் யார்னு பாருங்க.. கம்பம் தர்ஹாவுக்குள் டக்குனு "மண்டியிட்டு".. ஒரே சர்ப்ரைஸ்
தேனி: ஆந்திர மாநிலத்தில் தேர்தல் பரபரப்புகள் விறுவிறுவென நடந்து கொண்டிருக்க, நடிகை ரோஜா கம்பம் பகுதிக்கு வந்திருந்தது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பிரபல நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர். சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், டக்கென ஆந்திர அரசியல் பக்கம் தாவினார்.. அத்துடன், "ஃபயர் பிராண்ட்" என்ற பெயரையும் பெற்றிருப்பவர் ரோஜா..

செயல்பாடுகள்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததுமே ரோஜாவின் அதிரடிகள் ஆரம்பமாயின.. ஆந்திராவின் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக சிறப்புற பணியாற்றினார் நடிகை ரோஜா.. இவரது அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே தொகுதி மக்களால் பெரிதும் பேசப்பட்டதால், அமைச்சர் பதவியும் தானாகவே தேடி வந்தது... சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்...
எனவே, சுற்றுலா, கலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆந்திர மாநில அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்..
கலகலப்பு: பொதுவாக, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறையானது, அந்த அளவுக்கு பிரபலமானது கிடையாது.. இதன்காரணமாகவே, சுற்றுலா துறை அமைச்சர்கள் பற்றின செயல்பாடும், செய்திகளும் மக்களை பெரும்பாலும் சென்றடைவதும் இல்லை.. ஆனால், ரோஜா இந்த பொறுப்புக்கு வந்தபிறகு, சுற்றுலா துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளதுக சொல்கிறார்கள். இயல்பாகவே கலாரசனையும், கலகலப்பு குணமும் கொண்ட ரோஜாவுக்கு, இந்த துறை மிக பொருத்தமாக
மீண்டும் முதல்வர்: இந்நிலையில், ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மறுபடியும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார்... இந்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், ஜெகன்மோகன் ரெட்டி மறுபடியும் முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவிலும் நடிகை ரோஜா, தனது கணவருடன் சிறப்பு தொழுகை நடத்தினார். கம்பம் கம்பமெட்டு சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்காவானது, கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
பிரார்த்தனை: தற்போது, ரோஜாவும், தன்னுடைய கணவரும் பிரபல டைக்டருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்காவுக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டார்.. மொத்தம் 15 நிமிடம் வழிபாடு செய்தனர்.. அப்போது செல்வமணி, இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார்... இருவருமே மண்டியிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்துவிட்டு, கிளம்பி சென்றார்கள்.
ஆனால், ரோஜா இங்கு வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லையாம்.. ரோஜா தர்காவுக்கு வந்து சென்றபிறகுதான், அந்த பகுதி மக்களுக்கே இது குறித்த தகவல் பரவியது.
எப்போதுமே, ரோஜா மீது ஜெகன்மோகன் ரெட்டி மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருப்பவர்.. அதேபோல ரோஜாவும், ஜெகன்மோகன் மீதான சகோதர பாசத்தை அடிக்கடி வெளிப்படுத்தி கொண்டேயிருப்பார்.
சகோதரர்: எந்த கூட்டத்தில் பேசுவதானாலும் எங்களுடைய முதல்வர், என்னுடைய அண்ணா, ஜெகன் மோகன்" என்றுதான் பெருமையாக சொல்லுவார். தற்போது மீண்டும் அவரே முதல்வராக வேண்டும் என்று ரோஜா செய்து வரும் பிரார்த்தனை ஆந்திர மாநில மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அத்துடன், ரோஜா தன் கணவருடன் பிரார்த்தனை செய்த போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications