தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடிகாரம் ஓடும் முன் ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறேன்! 10 ஆண்டு பணிகள் ஒரே ஆண்டில்! முதல்வர் பெருமிதம்!

Google Oneindia Tamil News

தேனி: கடிகாரம் ஓடுவதற்கு முன்பே ஓடி உழைத்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தேனியில் பேசியிருக்கிறார்.

Recommended Video

    தேனியில் முதல்வர் ஸ்டாலின் | Oneindia Tamil

    மேலும், 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஒரே ஆண்டில் செய்துக் காட்டியிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    மாறி மாறி 6 பேர்! வரதட்சணை தராத மனைவி! நண்பர்களுடன் சேர்ந்து.“அதை”வீடியோ வேறு எடுத்து! பரபர சம்பவம் மாறி மாறி 6 பேர்! வரதட்சணை தராத மனைவி! நண்பர்களுடன் சேர்ந்து.“அதை”வீடியோ வேறு எடுத்து! பரபர சம்பவம்

    தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் அவர் பேசியதன் விவரம் வருமாறு;

    தேனி மாவட்டம்

    தேனி மாவட்டம்

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த இயற்கை சூழ்ந்த இந்த எழில் மிகுந்த தேனி மாவட்டத்துக்கு நான் வருகை தந்திருக்கிறேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்று வருகிற 7-ஆம் தேதி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. இருந்தாலும் இன்றைக்கு முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முதலாக இந்த தேனி மாவட்டத்தில் ஒரு சுற்றுப்பயணத்தை நடத்தக்கூடிய, அரசு விழாவில் பங்கேற்கக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தலைசிறந்த மாவட்டம்

    தலைசிறந்த மாவட்டம்

    தேனி மாவட்டம் என்பது தலைசிறந்த மாவட்டம்.அணை என்றால் மாபெரும் அணையான வைகை அணை.மலை என்றால் மேகமலை, வெள்ளிமலை, போடிமெட்டு.அருவிகள் என்றால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி. கலை என்றால் கண்ணகி கோவில். இந்த தேனி மாவட்டம் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மாவட்டம், ஆம். 1996-ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். 1.1.1997 முதல் தேனி மாவட்டம் செயல்படத் தொடங்கியது.

    தேனி ஐ.பெரியசாமி

    தேனி ஐ.பெரியசாமி

    இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர், திண்டுக்கல் ஐ.பெரியசாமி என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் இப்போது திண்டுக்கல் ஐ.பெரியசாமி மட்டுமல்ல, தேனி ஐ.பெரியசாமி என்று சொல்லக்கூடிய நிலைக்கு அவர் தன்னுடைய பணியை அவர் இங்கே ஆற்றிக் கொண்டிருக்கிறார். பல்வேறு நலத்திட்டப் பணிகளை, பல உதவிகளை இங்கு இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகத்தோடு அவர் தொடர்பு கொண்டு அந்தப் பணிகளையெல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தேனீயைப் போல சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர், துடிப்போடு செயல்படக்கூடியவர்.

    தனி மனித தேவை

    தனி மனித தேவை

    ஒவ்வொரு தனிமனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் நம்முடைய திராவிட மாடல் என்று நாம் சொல்வோம். இன்றைக்கு 10,427 பேர் அரசு உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், இதன் மூலமாக, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பயனடைகிறார்கள். உங்கள் முகத்தில் காணக்கூடிய மகிழ்ச்சிதான் என்னை ஒவ்வொரு நாளும் சோர்வில்லாமல் உழைக்கக்கூடிய அந்த உத்வேகத்தை, ஊக்கத்தை எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

    10 ஆண்டுப் பணிகள்

    10 ஆண்டுப் பணிகள்

    கழக ஆட்சி பொறுப்பேற்று இன்னும் ஓராண்டு கூட முடியவில்லை, வருகிற 7ஆம் தேதி தான் ஓராண்டு முடிவடைகிறது, அதற்கு இன்னும் ஒருவார காலம் இருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தால், ஏன், 10 வருடம் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்திருப்போமோ அதையெல்லாம் இந்த ஒரே ஆண்டிலே நம்முடைய அரசு அந்த சாதனையை செய்திருக்கிறது. இது என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

    தொடர் பயணம்

    தொடர் பயணம்

    இன்னும் சொல்ல வேண்டுமென்றால்- சென்னையில் சட்டமன்றம் - அதற்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சபை, அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற எதிர்பாராத விபத்து - அங்கே நான் சென்று வந்தேன். மறைந்த
    11 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி நிவாரணத் தொகையை வழங்கிவிட்டு வந்தேன் - மீண்டும் சட்டமன்றம், அதை முடித்துவிட்டு இப்போது தேனி வந்திருக்கிறேன்.

    கடிகாரம் ஓடும் முன்

    கடிகாரம் ஓடும் முன்

    இது முடித்துவிட்டு, மாலையில் திண்டுக்கல் செல்கிறேன். இதேபோன்று, அங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். அதை முடித்துவிட்டு, இரவோடு இரவாக, நான் சென்னைக்கு செல்ல வேண்டும். அதற்குப் பிறகு மே தின நாள். அதற்குப் பிறகு அன்று மாலையே நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 75ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஒரு பாடல் எழுதினார். அப்படித்தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

    நல்லதோர் நாடு

    நல்லதோர் நாடு

    நல்லதோர் நாட்டை மட்டுமல்ல - நல்லதோர் நாகரீகமான அரசியலையும் உருவாக்க நாம் நினைக்கிறோம். அதற்குத் தேவை தொலைநோக்குப் பார்வையும் நல்லெண்ணமும் தான்.எனது தொலைநோக்குப் பார்வை என்பது அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரை நாம் பெற வேண்டும். அனைத்திலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு என்னை நான் ஒப்படைத்து செயல்படுவேன்.

    English summary
    Cm Stalin Theni speech:கடிகாரம் ஓடுவதற்கு முன்பே ஓடி உழைத்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தேனியில் பேசியிருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X