23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்!
நபரை அரிவாளால் வெட்டி சாய்த்த தம்பதி கைது செய்யப்பட்டார்
தேனி: வெறும் 23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளை கொண்டு ஒரு நபரை சரமாரியாக வெட்டியே சாய்த்துவிட்டார்.. இதற்கு அவரது கணவரும் உடந்தை.. இப்போது ஜோடியாக கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த தம்பதி பாண்டீஸ்வரன் - நிரஞ்சனா. பாண்டீஸ்வரனுக்கு 30 வயதாகிறது.. நிரஞ்சனாவுக்கு 23 வயது ஆகிறது. இருவரும் ராயப்பன்பட்டி லூர்துசாமி நகரில் ஒரு வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிகண்டன் - ராஜேஸ்வரி ஆகியோருடன் இவர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது. இன்று காலை இந்த தம்பதி, இலை அறுப்பதற்காக சண்முகநதி டேம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மணி விடிகாலை 5.30 இருக்கும்,
அப்போது, பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்... தகராறு முற்றிவிட்டது.. ஒரு கட்டத்தில், மணிகண்டனை பாண்டீஸ்வரியும் - நிரஞ்சனாவும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் உள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜேஸ்வரியையும் வெட்டினர்.
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் துடிதுடிக்க.. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.. தகவலறிந்து ராயப்பன்பட்டி போலீசாரும் வந்துவிட்டனர்.. உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இப்போது, ராஜேஸ்வரி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, பாண்டீஸ்வரன், நிரஞ்சனா தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.. 23 வயதே ஆன நிரஞ்சனாவும் அரிவாளை கொண்டு ஒரு நபரை வெட்டி சாய்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications